
ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
ஓஎம்ஆர் சாலையில் மாடு குறுக்கே வந்ததால், தனியார் தொழிற்சாலை வேன் மற்றும் அரசுப் பேருந்து ஆகியவை மோதிக் கொண்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்; 9 பேர் காயமடைந்தனர். கல்பாக்கம் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 13 பெண்களை ஏற்றிக் கொண்டு, தனியார் தொழிற்சாலையின் வேன் ஒன்று ஓஎம்ஆர் சாலையில் கேளம்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பையனூரில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர் திசையில் மாமல்லபுரம் நோக்கி வந்த […]


