
திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை.. 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் திமுக பிரமுகர் லட்சுமணன், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், கொலை நடந்த ஒரு மணி நேரத்திற்குள் பிச்சைமுத்து, ரஞ்சித்குமார், வாசு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

