முக்கிய செய்திகள்
📅
முகப்பு/செய்திப் பிரிவு

OTHERS

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
மாவட்டம்•

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்து அவர் உற்சாகம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அவருக்கு தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான […]

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
அரசியல்•

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 4- ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 26- ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

திமுக மாஜியை நேரில் சந்தித்த தவெக விஜயபாஸ்கர்; தவெகவில் இணையும் திமுகவினர்!
அரசியல்•

திமுக மாஜியை நேரில் சந்தித்த தவெக விஜயபாஸ்கர்; தவெகவில் இணையும் திமுகவினர்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அன்னவாசல் ஒன்றிய திமுக செயலாளராக இருந்த சந்திரன், விராலிமலை ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் ஆகியோரின் ஒன்றிய செயலாளர்களை பதவிகளை கடந்த வாரம் திமுக தலைமை பறித்துவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதனால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அன்னவாசல் திமுக பேரூர் செயலாளர் முகமது ரிசா, சந்திரன் மகன் இளையசூரியன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஜி விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் தவெக பொதுச் செயலாளர் […]

தமிழ்நாடு நாள் – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தமிழகம்•

தமிழ்நாடு நாள் – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய […]

இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
இந்தியா•

இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்

புது டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இண்டியா கூட்டணியினர் இன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இண்டியா கூட்டணியின் பேரணிக்காக ‘சலோ டெல்லி’ (டெல்லி நோக்கிச் […]

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.
உலகம்•

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு நடத்திய புதிய கணக்கெடுப்பு இதனைத் தெரிவிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் 1,000 முதலாளிகளிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், மனிதவள (HR) நடைமுறைகளின் ஆரம்ப நடவடிக்கைகளான பணியமர்த்தல் (49%), பணியாளர் செயல்திறன் நிர்வாகம் (45%) ஆகியவற்றில் ‘ஏஐ’ பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, சம்பளத்தை முடிவு செய்தல் (26%), பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை […]

ஒரு தமிழர் நிச்சயம் பிரதமராவார்: துணை ஜனாதிபதி
தமிழகம்•

ஒரு தமிழர் நிச்சயம் பிரதமராவார்: துணை ஜனாதிபதி

ஒரு தமிழர் நிச்சயம் பிரதமராவார்: துணை ஜனாதிபதி துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை மதுரை, அக். 31– திண்டுக்கல் காந்திகிராம பல்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, நேற்று மாலை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு, கோவில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணியிடம் ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். எல்லோருக்கும் வாய்ப்பு அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு, பிரசாதம் வழங்கப்பட்டது. […]

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
மாவட்டம்•

ஐந்து தலைமுறை கண்ட 110 வயது மூதாட்டி சாவு

சேலம் மாவட்டம், கொளத்துார், கருங்கல்லுார் ஊராட்சி தார்க்காடை சேர்ந்தவர் மாதம்மாள், 110. இவரது கணவர் கருப்பண்ணன், 40 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். மாதம்மாள் மகள்கள் கருப்பாயி, 75, பழனியம்மாள், 70. மாதம்மாள், கருப்பாயி குடும்பத்துடன் வசித்தார். ஐந்து தலைமுறை கண்ட மாதம்மாள், சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, அவர் காலமானார். துக்க வீட்டில் நேற்று, மகள்கள் முதல் கொள்ளு பேரன், பேத்தி, அவர்கள் உறவினர்கள் என பெருங்கூட்டமே திரண்டது. நேற்று மதியம், 1:30 […]

இந்தியாவில் மட்டும் ‘ஜெயிலர் 2’ வசூல் ரூ.500 கோடியை கடந்து சாதனை
சினிமா•

இந்தியாவில் மட்டும் ‘ஜெயிலர் 2’ வசூல் ரூ.500 கோடியை கடந்து சாதனை

ரஜினியின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர் 2’ படம் இந்திய அளவில் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படத்தின் 15-வது நாளில் ரூ.5.99 கோடி வசூலாகி இருக்கும் […]

கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இந்தியா•

கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, அக். 31– கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.ஜே.பி., எனும் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ், இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் […]

“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை
உலகம்•

“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை

ஈரானுடன் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு கன்சாஸ் நகரின் கே.சி.எம்.ஓ வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: “ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஆனால், ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைத் தயாரிக்கவோ அல்லது கைப்பற்றவோ முடியாது என்பதற்கான உறுதியான உத்தரவாதம் அமெரிக்காவுக்கு தேவை. ஈரானிடம் அணுஆயுதம் இல்லாத நிலை உறுதி செய்யப்பட […]

தேனி சம்பவம் – சிறை பொறுப்பு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு
தமிழகம்•

தேனி சம்பவம் – சிறை பொறுப்பு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்: முதல்வர் விஜய் உத்தரவு

தேனியில் சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பொறுப்பு சிறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும், சிறைத் துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும் தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அரசு செய்திக் குறிப்பில், “தேனி மாவட்டச் சிறையில் 26.10.2026 அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த […]