முக்கிய செய்திகள்
📅
முகப்பு/அரசியல்/திமுக மாஜியை நேரில் சந்தித்த தவெக விஜயபாஸ்கர்; தவெகவில் இணையும் திமுகவினர்!
அரசியல்

திமுக மாஜியை நேரில் சந்தித்த தவெக விஜயபாஸ்கர்; தவெகவில் இணையும் திமுகவினர்!

✍️ admin••⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
திமுக மாஜியை நேரில் சந்தித்த தவெக விஜயபாஸ்கர்; தவெகவில் இணையும் திமுகவினர்!

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அன்னவாசல் ஒன்றிய திமுக செயலாளராக இருந்த சந்திரன், விராலிமலை ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் ஆகியோரின் ஒன்றிய செயலாளர்களை பதவிகளை கடந்த வாரம் திமுக தலைமை பறித்துவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதனால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அன்னவாசல் திமுக பேரூர் செயலாளர் முகமது ரிசா, சந்திரன் மகன் இளையசூரியன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஜி விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இதனைப் பார்த்த திமுகவினர், நடவடிக்கைக்கு முன்பே கட்சி மாறி உள்ளனர், திமுகவில் இருந்து கொண்டு விஜயபாஸ்கருக்கு வேலை செய்தார்கள் இப்போது நேரடியாக அவருக்கு வேலை செய்ய அவருடன் சென்றுவிட்டனர் என்று விமர்சனம் செய்தனர்.

இதற்கிடையில் நேற்று முன் தினம் மாஜி அமைச்சரும் திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான ரகுபதி, துரோகிகளையும் ஒற்றர்களையும் களையெடுத்தாச்சு என்று கூறினார். இந்த நிலையில் தான் நேற்று தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் மாஜி விஜயபாஸ்கர், அன்னவாசல் மாஜி திமுக செயலாளர் சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து தவெகவில் இணைய அழைத்துள்ளார். சால்வை அணிவித்து வரவேற்ற சந்திரன் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் முகமது பர்வேசும் சந்திரன் மகன் இளைய சூரியனிடம் பேசி உங்கள் தந்தையையும் கட்சியில் இணையச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

திமுக மாஜியை மாஜி விஜயபாஸ்கர் சந்தித்த படங்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், திமுக மாஜி ஒன்றிய செயலாளர் சந்திரன் நம்மிடம், “என் தந்தை லாந்தர் விளக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டை ஊர் ஊராக தூக்கிக் கொண்டு போய் கூட்டம் நடத்தி திமுகவை வளர்த்தார். அது போல தான் நானும் கட்சிக்காக உண்மையாக உழைத்தேன். 17 ஆண்டுகள் 3 முறை ஒன்றிய செயலாளர், மாவட்டக் கவுன்சிலர், இப்போது திடீரென எங்களிடம் எதுவும் கேட்காமல் பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர். நானும் திமுக கரை வேட்டியோடு அமைதியாக இருப்போம் என்று தான் இருந்தேன். இதை சகிக்க முடியாமல் தான் என் மகன் த.வெ.க போனார். மன வருத்தத்தில் இருக்கும் போது திமுக மாசெ ரகுபதி பேசியது ரொம்ப  பாதிச்சிருச்சு. கட்சிக்காக உழைச்சது  நாங்க, ஆனால் மா.செ.க்கள் ரகுபதியும், செல்லப்பாண்டியும் விஜயபாஸ்கர் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர்கள் தான். ஆனால் இப்ப எங்களை குறை சொல்கிறார்கள். இந்த வருத்தத்தில் இருக்கும் போது தான் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நீங்கள் அதிமுக போகமாட்டீங்க தவெக வந்துவிடுங்கள், நான் இருக்கிறேன் உங்களுக்கான மரியாதையை கொடுப்போம் என்று பேசினார். தொடர்ந்து அமைச்சர் பர்வேசும் என் மகனிடம் பேசியுள்ளார். அதன் பிறகு தான் நானும் ஒரு முடிவெடுத்துள்ளேன். அதாவது, அன்னவாசல் நகரம், ஒன்றியத்தில் உள்ள திமுக நிர்வாகிகள், அணிப் பொறுப்பாளர்கள் என சுமார்  500 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அன்னவாசலில் இருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை சென்று தவெக மாவட்ட அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணையப் போகிறோம். சமீப காலமாக திமுக பணக்காரர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது” என்றார்.

தந்தை காலத்தில் இருந்து திமுகவில் இருந்து உடனே தவெக போனால் உரிய மரியாதை கிடைக்குமா? ஏற்கனவே தவெக போனவர்களுக்கு மரியாதை இல்லை என்கிறார்களே என்ற நமது கேள்விக்கு, “இத்தனை ஆண்டுகள் திமுகவிற்கு உழைத்தோம். இப்போது எதையும் எதிர்பார்க்காமல் தான் தவெக செல்கிறேன். 3 முறை திமுக ஒசெ வாக இருந்த நான் அடுத்து மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடுவேன் என்பதால் தான் சூழ்ச்சியால் என் பொறுப்பை பறித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்கள் திமுக மா செ க்கள்” என்றார். திமுகவினரோ மீண்டும் சொல்கிறோம், இவர்கள் திமுகவில் இருந்து விஜயபாஸ்கர் வெற்றிக்கு வேலை செய்தார்கள். இப்ப நேரடியாக அவர் கூடவே இணைந்து வேலை செய்வார்கள். இவர்கள் செல்வதால் திமுக தேய்ந்துவிடாது. அதிமுகவில் உள்ளவர்களை அழைத்துச் சென்ற விஜயபாஸ்கர் இடைத்தேர்தலை சமாளிக்க அடுத்து திமுகவினரை இழுத்து வருகிறார். அவருக்கு ஆதரவாக இருந்த திமுகவினர் அவருடன் போவார்கள். அவர்கள் திமுகவில் இருந்தாலும் திமுகவிற்கு பயனில்லை. விஜயபாஸ்கருக்கு தான் வேலை செய்வார்கள். அவர்களில் சில பேர் இன்னும் திமுகவில் உள்ளனர்.. அவர்களும் இடைத்தேர்தலுக்குள் போவார்கள் என்கின்றனர்.

 

 

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை
அரசியல்•

“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை

“டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 56% சரிந்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல. இதனால் டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது” என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதே […]

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
அரசியல்•

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 4- ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 26- ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

விராலிமலை இடைத்தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் முதல்வர் விஜய் – புதுக்கோட்டை பயணத்தின் பின்னணி
அரசியல்•

விராலிமலை இடைத்தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் முதல்வர் விஜய் – புதுக்கோட்டை பயணத்தின் பின்னணி

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதன் பின் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்லும் அவர், கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வர உள்ளார். மேலும் அவர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விராலிமலை தொகுதியில் ரோட்ஷோ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதன் பின் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்லும் […]

“மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்”- முதல்வர் விஜய்
அரசியல்•

“மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்”- முதல்வர் விஜய்

“சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். வீரம் செறிந்த […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →