முக்கிய செய்திகள்
📅
முகப்பு/இந்தியா/கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இந்தியா

கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

சென்னை, அக். 31–
கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சி.ஜே.பி., எனும் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ், இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனு விபரம்:
மத்திய அரசு நடத்தும்விசாரணையில், சவுரவ்தாஸ் நேபாளி என தெரியவந்தால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும்.
நீதித்துறை குறித்தும், குறிப்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும், அவதுாறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். எனவே, அவருடைய சமூக வலைதள கணக்குகளை முடக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி,நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, ‘இது தொடர்பாக, மத்திய அரசுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு
இந்தியா•

அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுப்ரமணி, “இன்று இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் நமது அக்னி வீரர்களுக்கும் மிக முக்கியமான நாளாகும். அனைத்து அக்னி வீரர்களும் இந்திய ராணுவத்தில் நிரந்தரமாகச் சேருவதற்கான வழிவகையை மத்திய அமைச்சரவை உருவாக்கி உள்ளது. அக்னிபாத் திட்டம் […]

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
இந்தியா•

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்: ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, ‘உச்ச நீதிமன்றம் டெல்லியிலோ அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ அமைந்திருக்க வழிவகை செய்கிறது.’ இந்தக் கோரிக்கையானது, 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் ஒரு விவாதப் பொருளாகவும் […]

இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
இந்தியா•

இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்

புது டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இண்டியா கூட்டணியினர் இன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இண்டியா கூட்டணியின் பேரணிக்காக ‘சலோ டெல்லி’ (டெல்லி நோக்கிச் […]

நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்
இந்தியா•

நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்

விக்​சித் பாரத் திட்​டத்​தின் ஒரு பகுதி​யாக நாடு முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனைகள், ஆரம்ப சுகாதார மையங்​களை இல​வச​மாக பராமரிக்க தயாராக இருப்பதாக அப்​போலோ குழும தலை​வர் பிரதாப் சி ரெட்டி தெரி​வித்​தார். அப்​போலோ மருத்​துவ குழு​மத்​தின் தலை​வர் பிரதாப் சி ரெட்டி ஆந்​திர மாநிலம், சித்​தூர் மாவட்​டத்​தில் உள்ள அவரது சொந்த ஊரான அரகொண்​டாவில் நிறு​வப்​பட்​டுள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யின் சாதனையை பாராட்டி பேசினார். தனது சொந்த ஊர் மக்​களுக்​காக கடந்த 2000-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →