முக்கிய செய்திகள்
📅
முகப்பு/இந்தியா/அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு
இந்தியா

அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுப்ரமணி, “இன்று இந்திய பாதுகாப்புப் படைகளுக்கும் நமது அக்னி வீரர்களுக்கும் மிக முக்கியமான நாளாகும். அனைத்து அக்னி வீரர்களும் இந்திய ராணுவத்தில் நிரந்தரமாகச் சேருவதற்கான வழிவகையை மத்திய அமைச்சரவை உருவாக்கி உள்ளது.

அக்னிபாத் திட்டம் ஜூன் 14, 2022-ல் தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது, அக்னி வீரர்களின் செயல்பாடு தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும் என்றும், இத்திட்டம் அவ்வப்போது மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது முதல் தொகுதியைச் சேர்ந்த அக்னி வீரர்களின் நான்கு ஆண்டு பணிக்காலம் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர்களின் பணித்திறன் குறித்து மிகவும் நேர்மறையான கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தகுதியின் அடிப்படையில் 25 சதவீத அக்னி வீரர்கள் வழக்கமான ராணுவ படைகளில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

மீதமுள்ள 75 சதவீத அக்னி வீரர்கள் ஒழுக்கமான, ஊக்கமுள்ள இளைஞர்களாக மீண்டும் சமூகத்துக்கு திரும்புவார்கள் என்று ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திருத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி, அந்த 75 சதவீத அக்னி வீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படும். இந்த 2 ஆண்டு காலம் முடிந்த பிறகு, விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என தெரிவித்தார்.

2022ல் அக்னி வீரர்கள் ஆயுதப்படைகளில் சேர்க்கப்பட்டபோது, அவர்களின் பணிக்காலம் குறைவாக இருப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. பிஹாரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அக்னி வீரர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை இத்திட்டத்தில் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்
இந்தியா•

இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்

இந்திய பார் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, இனி எந்த வயதை சேர்ந்தவர்களும் வயது வரம்பின்றி சட்ட படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிற்கு 20 வயதும், 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு 30 வயதும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து 2016-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
இந்தியா•

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழகம் முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்: ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 130, ‘உச்ச நீதிமன்றம் டெல்லியிலோ அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்தியத் தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ அமைந்திருக்க வழிவகை செய்கிறது.’ இந்தக் கோரிக்கையானது, 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் ஒரு விவாதப் பொருளாகவும் […]

இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
இந்தியா•

இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்

புது டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இண்டியா கூட்டணியினர் இன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இண்டியா கூட்டணியின் பேரணிக்காக ‘சலோ டெல்லி’ (டெல்லி நோக்கிச் […]

கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இந்தியா•

கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, அக். 31– கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.ஜே.பி., எனும் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ், இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →