முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/தமிழ்நாடு நாள் – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தமிழகம்

தமிழ்நாடு நாள் – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
தமிழ்நாடு நாள் – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!” என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

“மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்” என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.

எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சியில்தான் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம். தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!” என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையும், சங்க இலக்கியங்களின் செழுமையும், தமிழர் பண்பாட்டின் பெருமையும் போற்றிப் பாதுகாக்கும் பெருநிலமாம் நம் மாநிலம் நமக்கு அமைந்திட்ட வரலாற்று நாள் இன்று.

நவம்பர் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்தது எனது தலைமையிலான அதிமுக அரசு என்ற பெருமிதத்துடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

வீரத்திலும், அறிவிலும், கலை-பண்பாட்டிலும், சமூக-கல்வி-தொழில் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும் நம் தாய்த்தமிழ்நாடு, அனைத்துத் துறைகளிலும் மேலும் பல உயரங்களைத் தொட்டு, உலக அரங்கில் தனிப்பெருமையுடன் திகழ்ந்திட, தமிழ் கூறும் நல்லுலகின் பிள்ளைகளாம் நாம் அனைவரும் ஓரணியாய் நின்று உழைப்போமென இந்நன்னாளில் உறுதியேற்போம்!” என தெரிவித்துள்ளார்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகம்•

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் சி.பழனி உட்பட 3 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் 2 பேர், 69 துணை ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) டி.ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநராகவும், அந்த பதவியில் இருந்த சி.பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல, விடுப்பு […]

ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
தமிழகம்•

ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

ரூ. 400 கோடி முறைகேடு வழக்கில் 3 நாட்கள் போலீ்ஸ் காவலில் விசாரிக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், விசாரணை முடிந்து நேற்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 400 கோடி வரை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகத் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை கடந்த 3 நாட்களாக தங்களது காவலில் எடுத்து […]

“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை
அரசியல்•

“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை

“டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 56% சரிந்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல. இதனால் டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது” என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதே […]

காலை 6 மணி காட்சிக்கு அனுமதி; ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழகம்•

காலை 6 மணி காட்சிக்கு அனுமதி; ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டுக்கு முன் அதிகாலை சிறப்பு காட்சி நடைமுறையில் இருந்தது. இது படம் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்கும் பொருட்டு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மற்றும் 6 மணிக் காட்சி வரையறுக்கப்பட்டது. ஆனால் 2023ஆம் ஆண்டு துணிவு – வாரிசு ஆகிய பட வெளியீட்டின் போது ஒரு ரசிகர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அந்த ரசிகர் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லாரி மேல் ஏறி நின்று கொண்டாட்டத்தில் […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →