முக்கிய செய்திகள்
📅
முகப்பு/முக்கிய செய்திகள்/எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு – டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?

எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு – டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?

✍️ admin••⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு – டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

TN Reduce Aviation Fuel VAT: விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை 16 சதவிகிதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் கட்டணம் குறைந்து சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VAT வரியை குறைத்த தமிழ்நாடு அரசு:

மிகவும் முக்கியமான மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவாக, பட்டியலிடப்பட்ட விமான சேவைகளுக்கான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 29 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் அதிகபட்ச மதிப்பு கூட்டு வரிகளில் ஒன்றை சென்னை பின்பற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அதனை குறைத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவு, வரும் நவம்பர் 1ம் தேதியில் தொடங்கி 2027ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநிலம் முழுவதும் உள்ள மற்ற விமான நிலையங்களில், விமான எரிபொருளுக்கான மதிப்பு கூட்டு வரி 5 சதவிகிதத்திலிருந்து ஒரு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை:

தமிழ்நாடு அரசின் அறிவிப்பானது விமான எரிபொருள் வரிவிதிப்பு அளவில் தமிழ்நாட்டை அதன் அண்டை மாநிலங்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. அதோடு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் நீண்டகாலக் கோரிக்கை ஓரளவு நிறைவேறியுள்ளது. விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவில் விமான எரிபொருள் பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இதில் VAT ஒரு முக்கிய காரணியாக உள்ளது. விமான எரிபொருள் மீதான VAT விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று விமான நிறுவனங்கள் நீண்டகாலமாக மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன. தற்போது வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் பயன்பெறும் வகையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டிலிருந்து விமான இணைப்புகளை மேம்படுத்தவும், புதிய விமானச் சேவைகளைச் சேர்க்கவும் வேண்டிய பொறுப்பு விமான நிறுவனங்கள் வசம் சென்றுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவும் டெல்லியும் விமான எரிபொருள் மீதான VAT விகிதத்தைக் குறைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விமான சேவைகள் கிடைக்குமா?

எரிபொருள் மீதான அதிகப்படியான வரியால் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதோடு, அந்த கட்டணம் செலுத்தி மக்கள் ஆர்வம் காட்டாததால், பல விமான நிறுவனங்கள், சென்னையிலிருந்து தங்களது சேவைகளை கணிசமாக குறைத்துள்ளன. இந்நிலையில் வரி குறைக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் விலை குறைவதோடு, சென்னையில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போதுமான இடவசதி இல்லாதது மற்றும் சுமாரான பராமரிப்பு ஆகியவற்றோடு, எரிபொருள் மீதான அதிகப்படியான மதிப்பு கூட்டு வரியும் சென்னை விமான நிலையத்தின் செயல்திறன் குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ நிறுவனம் பாராட்டு

தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்றுள்ள இண்டிகோ நிறுவனம், “இத்தகைய முடிவுகளானது விமானப் போக்குவரத்தை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்து, இந்தியாவில் மேலும் வலுவான விமானப் போக்குவரத்துச் சூழலமைப்பிற்கு பங்களிக்கின்றன” என குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தொழில்துறை வல்லுநர்களும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்
இந்தியா•

இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்

இந்திய பார் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, இனி எந்த வயதை சேர்ந்தவர்களும் வயது வரம்பின்றி சட்ட படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிற்கு 20 வயதும், 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு 30 வயதும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து 2016-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
அரசியல்•

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்

இடைத்​தேர்​தல் நடை​பெற உள்ள விராலிமலை தொகுதி​யில், முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் சார்​பில் விசிலுடன் கூடிய பரிசுப் பொருட்​கள் வீடுவீடாக விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்​றன. விராலிமலை தொகுதி உரு​வான 2011-ல் இருந்து நடை​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவைத் தேர்​தல்​களி​லும் அதிமுக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்று வந்​தார். கடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் அவர் வெற்றி பெற்ற நிலை​யில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமியுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால், அக்​கட்​சி​யில் இருந்து வில​கியதுடன், எம்​எல்ஏ பத​வியையும் அவர் ராஜினாமா […]

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகம்•

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் சி.பழனி உட்பட 3 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் 2 பேர், 69 துணை ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) டி.ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநராகவும், அந்த பதவியில் இருந்த சி.பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல, விடுப்பு […]

ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
தமிழகம்•

ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர்: நாளை வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

ரூ. 400 கோடி முறைகேடு வழக்கில் 3 நாட்கள் போலீ்ஸ் காவலில் விசாரிக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், விசாரணை முடிந்து நேற்று மாலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ. 400 கோடி வரை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகத் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை கடந்த 3 நாட்களாக தங்களது காவலில் எடுத்து […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →