முக்கிய செய்திகள்
📅
முகப்பு/உலகம்/சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.
உலகம்

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு நடத்திய புதிய கணக்கெடுப்பு இதனைத் தெரிவிக்கிறது.

ஜூன், ஜூலை மாதங்களில் 1,000 முதலாளிகளிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், மனிதவள (HR) நடைமுறைகளின் ஆரம்ப நடவடிக்கைகளான பணியமர்த்தல் (49%), பணியாளர் செயல்திறன் நிர்வாகம் (45%) ஆகியவற்றில் ‘ஏஐ’ பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சம்பளத்தை முடிவு செய்தல் (26%), பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை நிர்வகித்தல் (15%) ஆகியவற்றில் அந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.

இருநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்கள், ‘ஒர்க்டே’, ‘எஸ்ஏபி சக்சஸ் ஃபேக்டர்ஸ்’ போன்ற செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மனிதவளக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஆய்வு.

உதாரணமாக, மனிதவள நிபுணர்களுக்கு பணியமர்த்தல் உதவியாளர், செயல்திறன் உதவியாளர் போன்ற ஏஐ உதவி வடிவிலான தீர்வுகளை ‘ஒர்க்டே’ மென்பொருள் வழங்குகிறது.

பெரு நிறுவனங்கள் அவ்வாறு செய்யும்போது, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சாட்ஜிபிடி, மைக்ரோசாஃப்ட் கோபைலட் போன்ற பொதுவான ஏஐ பயன்பாட்டுக் கருவிகளையே அதிகம் நம்பியிருக்கின்றன.

கிராண்ட் ஹயாட் சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) நடைபெற்ற சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.

அங்கு நடைபெற்ற கண்காட்சியில் சிங்டெல், ஹூவாவே சிங்கப்பூர் மற்றும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி உள்ளிட்ட எட்டு அமைப்புகள் தங்களின் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளைக் காட்சிப்படுத்தி இருந்தன.

வர்த்தகத் தலைவர்கள், மூத்த மனிதவள நிபுணர்கள் மற்றும் வர்த்தகச் சங்கத் தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே மனிதவள வழிகாட்டி நூல் ஒன்றை மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் வெளியிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதவளப் பயன்பாடுகளுக்கான ஏஐ தொடக்கக் கருவிகளையும் மனிதவள நிபுணர்களிடையே ஏஐ பயன்பாட்டுத் திறனை வளர்ப்பதற்கான பயிற்சியையும் அந்த நூல் ஒருங்கிணைக்கிறது.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மனிதவள நிபுணத்துவத்தை அதிக நீக்குப்போக்குடன் பெறுவதற்கு உதவுவதும் நூலின் நோக்கமாகும்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சருமான திருவாட்டி லாவ் மாநாட்டில் உரையாற்றும்போது, வேலைகளை மறுவடிவமைக்கும்போது ​​தொழிற்சங்கங்களையும் ஊழியர்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு முதலாளிகளை வலியுறுத்தினார்.

“மாற்றத்தை வடிவமைக்க உதவுவோர் அந்த மாற்றத்திற்குப் பங்களிக்க அதிக வாய்ப்புள்ளது,” என்றார் அவர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
இடைக்கால தேர்தல் தோல்வி: டிரம்பை பதவி நீக்கம் செய்வது எளிதாகிவிட்டதா?
உலகம்•

இடைக்கால தேர்தல் தோல்வி: டிரம்பை பதவி நீக்கம் செய்வது எளிதாகிவிட்டதா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த இடைக்காலத் தேர்தல் ஆண்டை குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துத் தொடங்கினார். ஜனவரி 6ஆம் தேதி, பிரதிநிதிகள் சபையிலுள்ள குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் டிரம்ப், “நீங்கள் இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நாம் இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், என்னை பதவியில் இருந்து நீக்குவதற்காக அவர்கள் பதவி நீக்க தீர்மானத்தின் மூலம் ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்” என்று கூறினார். தற்போது, இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி […]

5 புதிய நாடுகளில் ஊழியர்களுக்கு ‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை விரிவாக்கிய கூகுள்
உலகம்•

5 புதிய நாடுகளில் ஊழியர்களுக்கு ‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை விரிவாக்கிய கூகுள்

செயற்கை நுண்ணறிவுதுறையில் தங்களது முதலீடுகளையும் வளங்களையும் கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கூகுள்நிறுவனம் தனது விருப்ப ஓய்வு திட்டத்தை மேலும் 5 நாடுகளுக்கு விரிவாக்கியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூகுள் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ள தகவலின்படி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இத்திட்டம் புதிதாக நீட்டிக்கப்பட்டுள்ளது. AI முதலீடுகளும் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் பின்னணியும் கூகுள் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், செயற்கை நுண்ணறிவு மற்றும் […]

“இஸ்ரேலுக்கான நிதி உதவி நிறுத்தம்” – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
உலகம்•

“இஸ்ரேலுக்கான நிதி உதவி நிறுத்தம்” – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறும்போது, “இஸ்ரேலுக்கான நிதி உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் […]

“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை
உலகம்•

“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை

ஈரானுடன் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு கன்சாஸ் நகரின் கே.சி.எம்.ஓ வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: “ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஆனால், ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைத் தயாரிக்கவோ அல்லது கைப்பற்றவோ முடியாது என்பதற்கான உறுதியான உத்தரவாதம் அமெரிக்காவுக்கு தேவை. ஈரானிடம் அணுஆயுதம் இல்லாத நிலை உறுதி செய்யப்பட […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →