முக்கிய செய்திகள்
📅
முகப்பு/முக்கிய செய்திகள்/“பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை ரத்து செய்தால் எனக்கு புகார் அனுப்பலாம்” – அமைச்சர் ராஜ்மோகன்

“பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை ரத்து செய்தால் எனக்கு புகார் அனுப்பலாம்” – அமைச்சர் ராஜ்மோகன்

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
“பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை ரத்து செய்தால் எனக்கு புகார் அனுப்பலாம்” – அமைச்சர் ராஜ்மோகன்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

“பள்ளிகளில் இனி உடற்கல்வி வகுப்பை ஆசிரியர்கள் ரத்து செய்ய கூடாது. மீறி ரத்து செய்தால் எனக்கு புகார் அனுப்பலாம்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாணவர் செயற்களம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு பயிலரங்கம் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு (என்எம்எம்எஸ்) பயிற்சி புத்தத்தை வெளியிட்டு பேசியதாவது: பள்ளிகளில் வாரத்தில் 2 பாடவேளைகள் என்று இருந்த உடற்கல்வி வகுப்பு இனி 5 நாட்களுக்கும் இருக்கும். உடற்கல்வி வகுப்பை ஆசிரியர்கள் இனி ரத்து செய்ய கூடாது.

யாரேனும் உடற்கல்வி வகுப்பை ரத்து செய்துவிட்டு, வேறு பாடங்களை படிக்கச் சொன்னால், எனக்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பலாம். கணிதம், அறிவியல் பாடங்களை போன்று உடற்கல்வி பாடமும் இருக்க வேண்டும். சில பாடங்கள் தங்களுக்கு வரவில்லை என்று மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். எதில் நமக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.

தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெற்று விடலாம். பெற்றோரை திருப்திப்படுத்த துறையை தேர்வு செய்ய வேண்டாம். பெற்றோர் யாரும் இனி குழந்தைகளை திட்ட கூடாது. இது அமைச்சரின் உத்தரவு. குழந்தைகளை ஒப்பிட்டு பேசக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு, அழகப்பா பல்கலை., துணைவேந்தர் (பொ) ஜெயகாந்தன், முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர்கள் இருவரும் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவுக்கு மாணவர்களுடன் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
உத்தர பிரதேச திருமணத்தில் இரு மணமகன்களுக்கு தலா ரூ.1 கோடி பண மாலை
இந்தியா•

உத்தர பிரதேச திருமணத்தில் இரு மணமகன்களுக்கு தலா ரூ.1 கோடி பண மாலை

உத்தர பிரதேசத்தின் மதுராவில் நடைபெற்ற திருமணத்தில் இரு மணமகன்களுக்கு தலா ரூ.1 கோடி மதிப்பிலான பண மாலைகள் அணிவிக்கப்பட்டன. உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டம், நாக்லா பாண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி யோகேந்திர சிங். இவரது தம்பி குஷாபால் சிங். இருவரின் மகன்களுக்கும் முத்செராஸ் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 21-ம் தேதி திருமண ஊர்வலத்தில் மணமகன்கள் பிரசாந்த், கன்ஹா ராகவ் ஆகியோர் குதிரைகளில் மணமகள்களின் கிராமத்துக்கு ஊர்வலமாக சென்றனர். நெருங்கிய உறவினர்கள் பரிசுகளை […]

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு
தமிழகம்•

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டுக்குச் சென்ற தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான போலீஸார், எம்எல்ஏவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் துறையில் விசாரித்தபோது, ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ மீது 3 […]

ரெட்சோன் பகுதியாக திருப்பரங்குன்றம் : போலீஸ் குவிப்பு!
தமிழகம்•

ரெட்சோன் பகுதியாக திருப்பரங்குன்றம் : போலீஸ் குவிப்பு!

திருப்பரங்குன்றத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது தர்கா அருகே உள்ள சர்வே தூணில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை ஒருநாள் தீபம் ஏற்ற உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதேசமயம் முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் அரசு தலைமை வழக்கறிஞர், டிஜிபி, அமைச்சர்கள் நிர்மல் குமார், […]

சண்டியர்’ தலைப்பை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு
அரசியல்•

சண்டியர்’ தலைப்பை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’ திரைப்படத்தின் தலைப்பை மாற்ற கோரி, வரும் டிச.7-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். நடிகர்களின் ஒவ்வொரு அசைவும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தென் மாவட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு படக்குழுவினர் தலைப்பை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆர்ப்பாட்ட நாளன்று தணிக்கை குழுவிடமும் தலைப்பை மாற்ற கோரி மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →