முக்கிய செய்திகள்
📅
முகப்பு/மாவட்டம்/புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
மாவட்டம்

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்து அவர் உற்சாகம் அடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார்.

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அவருக்கு தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து அவர் பங்கேற்ற ரோடு ஷோ நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ரூ.100 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயணிகளுக்கு வழங்கினார்.

பின்னர், 24.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தையும், மாவட்ட விளையாட்டு அரங்கில் புதிதாக 8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் முன்பு கூடியிருந்த பொதுமக்களுடன் அவர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
பின்னர் அங்கிருந்து ரோடு ஷோ மூலமாக புதுக்கோட்டை பயணியர் மாளிகை சென்றடைந்த அவர், சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் மாலை சென்னை சாலை மார்க்கமாக திருச்சி சென்று, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.

காத்திருந்த பெண் மயக்கம்

இதனிடையே, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வருகைக்காக காத்திருந்த பெண் ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்க வருகை தந்தை முதலமைச்சர் விஜய்யை பார்க்க அதிகாலையில் இருந்து, சிறியவர்கள், பெரியவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது, வெயிலின் தாக்கத்தால் புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண் மயங்கி விழுந்தார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், அந்த பெண்ணை மீட்டு முதலுதவி சிகிச்சை அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
மாவட்டம்•

ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

ஓஎம்ஆர் சாலை​யில் மாடு குறுக்கே வந்​த​தால், தனி​யார் தொழிற்​சாலை வேன் மற்​றும் அரசுப் பேருந்து ஆகியவை மோதிக் கொண்ட விபத்​தில் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர்; 9 பேர் காயமடைந்​தனர். கல்​பாக்​கம் அரு​கில் உள்ள பல்​வேறு கிராமங்​களை சேர்ந்த 13 பெண்​களை ஏற்​றிக்​ கொண்​டு, தனி​யார் தொழிற்​சாலை​யின் வேன் ஒன்று ஓஎம்​ஆர் சாலை​யில் கேளம்​பாக்​கம் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தது. பையனூரில் சாலை​யின் குறுக்கே மாடு வந்​த​தால் ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த வேன் எதிர் திசை​யில் மாமல்​லபுரம் நோக்கி வந்த […]

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை.. 3 பேர் கைது
மாவட்டம்•

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை.. 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் திமுக பிரமுகர் லட்சுமணன், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், கொலை நடந்த ஒரு மணி நேரத்திற்குள் பிச்சைமுத்து, ரஞ்சித்குமார், வாசு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
மாவட்டம்•

ஐந்து தலைமுறை கண்ட 110 வயது மூதாட்டி சாவு

சேலம் மாவட்டம், கொளத்துார், கருங்கல்லுார் ஊராட்சி தார்க்காடை சேர்ந்தவர் மாதம்மாள், 110. இவரது கணவர் கருப்பண்ணன், 40 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். மாதம்மாள் மகள்கள் கருப்பாயி, 75, பழனியம்மாள், 70. மாதம்மாள், கருப்பாயி குடும்பத்துடன் வசித்தார். ஐந்து தலைமுறை கண்ட மாதம்மாள், சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, அவர் காலமானார். துக்க வீட்டில் நேற்று, மகள்கள் முதல் கொள்ளு பேரன், பேத்தி, அவர்கள் உறவினர்கள் என பெருங்கூட்டமே திரண்டது. நேற்று மதியம், 1:30 […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →