முக்கிய செய்திகள்
📅
முகப்பு/உலகம்/வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: “சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்”- ஜின்பிங்
உலகம்

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: “சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்”- ஜின்பிங்

✍️ Nermaiyin Paathai••⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: “சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்”- ஜின்பிங்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

நேற்று முன்தினம் (செப்டம்பர் 23) அமெரிக்காவிற்குச் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

இவரை விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

மிக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே விமான நிலையத்திற்கே சென்று அமெரிக்க அதிபர் வரவேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜின்பிங் பயணம் ஏன் முக்கியமானது?

ஜின்பிங்கின் இந்தப் பயணம் மிக மிக முக்கிய நேரத்தில் நடந்திருக்கிறது. ஈரானும், சீனாவும் நெருங்கிய கூட்டாளிகள். ஈரான் மீது அமெரிக்கா போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தப் பயணம் ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் முதல் நாடு சீனா. கடந்த வாரம்தான், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் 5 நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கும் ‘ரஷ்ய தடைச் சட்டத்தில்’ கையெழுத்திட்டார் ட்ரம்ப்.

இது இன்னும் அமலுக்கு வரவில்லை. ஜின்பிங்கின் பயணத்திற்காக அமல் தள்ளிச் சென்றுள்ளது. இதுவும் மிக முக்கியமான ஒன்று.

இரு நாடுகளுமே ஏ.ஐ-யில் முன்னணியில் இருந்து வருகிறது. இப்போது ஏ.ஐ தொழில்நுட்ப ரேஸில் யார் முந்துவார் என்கிற போட்டியும் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் இந்தப் பயணம் என்பது கவனிக்கப்படுகிறது.

மிக முக்கியமாக, இரு நாடுகளுக்கு இடையேயும் அமைதியாக வணிகப் போர் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

தொழில்நுட்பத் தடைகள், விவசாய ஏற்றுமதிகள் மற்றும் அரிய கனிமங்களின் சப்ளை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் இருந்து வருகிறது.

இது இப்போதைக்கு ஒப்பந்தங்கள் மூலம் இரண்டு மாதங்களுக்குத் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில்தான் இந்தப் பயணம் நடந்திருக்கிறது.

ட்ரம்ப் பேச்சு

நேற்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்தது.

இந்தச் சந்திப்பு குறித்து ட்ரம்ப், “அதிபர் ஜி, மேடம் பெங் மற்றும் சீனக் குழுவை எங்களது அழகான வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி. இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

கடந்த மே மாதம் பெய்ஜிங்கில் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு எங்களுக்கு அளிக்கப்பட்ட பிரமாண்டமான, மிக நேர்த்தியான உபசரிப்பு மறக்க முடியாதது.

அமெரிக்காவிற்கு இரண்டாவது முறையாக அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் சீனத் தலைவர் என்ற பெருமையைப் பெறும் அதிபர் ஜியை வாஷிங்டனில் உபசரிப்பதில் மெலனியாவும் நானும் பெருமிதம் கொள்கிறோம்.

2016-ல் நான் முதன்முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதிபர் ஜியும் நானும் பரஸ்பர மரியாதை மற்றும் எங்களது மக்களின் முக்கிய நலன்களின் அடிப்படையில் ஒரு உண்மையான, மிகச் சிறந்த நட்புறவை வளர்த்தெடுத்துள்ளோம்.

வெள்ளை மாளிகையில் நாம் இருவரும் ஒன்றாகச் சந்திப்பது இதுவே முதல்முறை” என்று பேசியிருந்தார்.

ஜின்பிங் பேச்சு

ஜி ஜின்பிங் பேசும்போது, “இன்று அதிபர் ட்ரம்பும் நானும் பல முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளோம்.

இது ஆக்கபூர்வமான சீனா-அமெரிக்க உறவுக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளதோடு, இருநாட்டு உறவுகளுக்கும் புதிய வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது.

80 ஆண்டுகளுக்கு முன்பாக, ஜப்பானிய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போரில் சீன மற்றும் அமெரிக்க மக்கள் தோளோடு தோள் நின்று போராடினார்கள்.

ரத்தத்தாலும் தியாகத்தாலும் செதுக்கப்பட்ட இத்தகைய ஆழமான நட்புறவு, தலைமுறை கடந்து நிச்சயம் நிலைத்து நிற்கும்.

அதிபர் ட்ரம்ப் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்று அமெரிக்க மக்களைப் பிரமாண்டமான வளர்ச்சியை நோக்கி வழிநடத்த போவதாக உறுதியேற்றுள்ளார்.

சீனாவோ தேசிய மறுமலர்ச்சியை அடைவதில் தீவிரமாகி, நவீனமயமாக்கல் மூலம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

இந்த இரண்டும் மிகவும் முக்கியமானவை. அதே வேளையில் அவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று வலுசேர்க்கக்கூடியவை.

சீனாவும் அமெரிக்காவும் பொறுப்புமிக்க வல்லரசுகளாகச் செயல்பட வேண்டும். எங்களது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இயங்கி,

பெருநாடுகள் இணைந்து வாழ்வதற்கான ஒரு புதிய அணுகுமுறையைக் கண்டறிய வேண்டும்” என்று பேசியிருந்தார்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
இடைக்கால தேர்தல் தோல்வி: டிரம்பை பதவி நீக்கம் செய்வது எளிதாகிவிட்டதா?
உலகம்•

இடைக்கால தேர்தல் தோல்வி: டிரம்பை பதவி நீக்கம் செய்வது எளிதாகிவிட்டதா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த இடைக்காலத் தேர்தல் ஆண்டை குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துத் தொடங்கினார். ஜனவரி 6ஆம் தேதி, பிரதிநிதிகள் சபையிலுள்ள குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் டிரம்ப், “நீங்கள் இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நாம் இடைக்காலத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், என்னை பதவியில் இருந்து நீக்குவதற்காக அவர்கள் பதவி நீக்க தீர்மானத்தின் மூலம் ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்” என்று கூறினார். தற்போது, இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி […]

5 புதிய நாடுகளில் ஊழியர்களுக்கு ‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை விரிவாக்கிய கூகுள்
உலகம்•

5 புதிய நாடுகளில் ஊழியர்களுக்கு ‘விருப்ப ஓய்வு’ திட்டத்தை விரிவாக்கிய கூகுள்

செயற்கை நுண்ணறிவுதுறையில் தங்களது முதலீடுகளையும் வளங்களையும் கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கூகுள்நிறுவனம் தனது விருப்ப ஓய்வு திட்டத்தை மேலும் 5 நாடுகளுக்கு விரிவாக்கியுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூகுள் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ள தகவலின்படி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இத்திட்டம் புதிதாக நீட்டிக்கப்பட்டுள்ளது. AI முதலீடுகளும் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் பின்னணியும் கூகுள் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், செயற்கை நுண்ணறிவு மற்றும் […]

“இஸ்ரேலுக்கான நிதி உதவி நிறுத்தம்” – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
உலகம்•

“இஸ்ரேலுக்கான நிதி உதவி நிறுத்தம்” – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறும்போது, “இஸ்ரேலுக்கான நிதி உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் […]

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.
உலகம்•

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு நடத்திய புதிய கணக்கெடுப்பு இதனைத் தெரிவிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் 1,000 முதலாளிகளிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், மனிதவள (HR) நடைமுறைகளின் ஆரம்ப நடவடிக்கைகளான பணியமர்த்தல் (49%), பணியாளர் செயல்திறன் நிர்வாகம் (45%) ஆகியவற்றில் ‘ஏஐ’ பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, சம்பளத்தை முடிவு செய்தல் (26%), பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →