முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/‘உடல்நலக் குறைவு என நாடகமாடி’ தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்
தமிழகம்

‘உடல்நலக் குறைவு என நாடகமாடி’ தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
‘உடல்நலக் குறைவு என நாடகமாடி’ தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

தேனி கிளைச் சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தப்பியோடிய கைதிகளில் இருவரை தேடுதல் நடவடிக்கையின்போது காவல்துறையினர் பிடித்துள்ளதாக தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மேலும் 2 பேரை காவல்துறை பிடித்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ஆம் தேதி) இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.

இந்த நிலையில் தேக்கம்பட்டி சிறையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி சிறை வளாகத்தில் ஆய்வு செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் கைதிகள் சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை பிடிக்கப்பட்ட  ராஜ்குமார் மற்றும் ராஜா சிக்கந்தர்
படக்குறிப்பு, இன்று அதிகாலை பிடிக்கப்பட்ட கைதிகள் ராஜ்குமார் மற்றும் ராஜா சிக்கந்தர்

கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி, உடல்நிலை சரியில்லை என நாடகமாடி கைதிகள் தப்பித்து சென்றதாக கூறினார்.

கைதிகள் 17 பேரும் ஒரே சிறை செல்லில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதை தொடர்ந்து சிறை காவலர் செல்லுக்கு வந்தபோது அவரை தாக்கிவிட்டு இவர்கள் 17 பேரும் தப்பியதாகவும் காவல்துறையை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

'உடல்நலக் குறைவு' என நாடகமாடி தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் - என்ன நடந்தது?

இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் தங்கபாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் இரு காவலர்களுக்கும் காயமடைந்துள்ளனர்.

தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அண்டை மாவட்டமான திண்டுக்கல்லில் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தச் சாவடிகள் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

 விஜயேந்திர பிடாரி
படக்குறிப்பு, விஜயேந்திர பிடாரி

தப்பி ஓடிய கைதிகள் யார்?

மதுரை மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி (எ) மதன், ராஜ்குமார், திருப்பதி, பொன்முத்துச்செல்வம், மீனாட்சிசுந்தரம், நிசாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக்ராஜா, பிரசாந்த் (எ) லிங்க பிரசாத், ராஜா சிக்கந்தர் மற்றும் சோலைமுகிலீஸ்வரன்,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தருண்குமார்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி செல்வம்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரெஜின்

தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலம்பரசன்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை
அரசியல்•

“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை

“டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 56% சரிந்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல. இதனால் டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது” என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதே […]

காலை 6 மணி காட்சிக்கு அனுமதி; ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழகம்•

காலை 6 மணி காட்சிக்கு அனுமதி; ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டுக்கு முன் அதிகாலை சிறப்பு காட்சி நடைமுறையில் இருந்தது. இது படம் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்கும் பொருட்டு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மற்றும் 6 மணிக் காட்சி வரையறுக்கப்பட்டது. ஆனால் 2023ஆம் ஆண்டு துணிவு – வாரிசு ஆகிய பட வெளியீட்டின் போது ஒரு ரசிகர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அந்த ரசிகர் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லாரி மேல் ஏறி நின்று கொண்டாட்டத்தில் […]

காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமைப் பொறியாளர் நியமனம் எப்போது? நிதித்துறை ஆதிக்கம்; வாடுகிறது விவசாயம்!
தமிழகம்•

காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமைப் பொறியாளர் நியமனம் எப்போது? நிதித்துறை ஆதிக்கம்; வாடுகிறது விவசாயம்!

மேகதாது அணை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, இக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கச் செய்து, காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குப் புதிய தலைமைப் பொறியாளரை நியமிக்க அரசாணை வெளியிட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதிநீர்ச் சிக்கல் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசின் உரிமைகளை நீதிமன்றங்களிலும் ஆணையங்களிலும் நிலைநிறுத்தி வரும் ‘காவிரி மற்றும் […]

சரியும் ஜி.எஸ்.டி. வருவாய்! ஆந்திராவுக்கு செல்லும் முதலீடுகள்: த.வெ.க. அரசின் நிர்வாக தோல்வி காரணமா?
தமிழகம்•

சரியும் ஜி.எஸ்.டி. வருவாய்! ஆந்திராவுக்கு செல்லும் முதலீடுகள்: த.வெ.க. அரசின் நிர்வாக தோல்வி காரணமா?

தென்னிந்தியாவின் முன்னணி பொருளாதார மற்றும் தொழில்துறை மையமாகப் பல தசாப்தங்களாகத் திகழ்ந்து வந்த தமிழ்நாடு, அண்மைக்காலத்தில் பொருளாதார ரீதியாக சந்ததித்து வரும் சவால்களும் மந்தநிலையும் சாமானிய பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு த.வெ.க. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் நிலவும் மெத்தனப்போக்கும், தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைப் பொருளாதாரக் போட்டிக் களத்தில் பின்தள்ளியிருப்பதாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தென்னிந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தியின் முதன்மை […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →