முக்கிய செய்திகள்
📅
முகப்பு/உலகம்/டெல்லியில் SCO மெகா கலாச்சார மாநாடு: பாகிஸ்தான் அமைச்சருக்கு அழைப்பு விடுத்த இந்தியா
உலகம்

டெல்லியில் SCO மெகா கலாச்சார மாநாடு: பாகிஸ்தான் அமைச்சருக்கு அழைப்பு விடுத்த இந்தியா

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
டெல்லியில் SCO மெகா கலாச்சார மாநாடு: பாகிஸ்தான் அமைச்சருக்கு அழைப்பு விடுத்த இந்தியா

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

SCO அமைப்பின் முதலாவது ‘நாகரிக உரையாடல் அரங்கு’ எதிர்வரும் நவம்பர் 20 முதல் 22 வரை புதுடெல்லியில் இந்தியாநடத்தவுள்ளது. புரானா கிலா கோட்டையில் நடைபெறும் இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடிமுறைப்படி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டிற்கு SCO அமைப்பின் 10 உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சிக்கு இந்தியா அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பியுள்ளது. எனினும், மாநாட்டில் பாகிஸ்தான் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பதை அந்நாடு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை அமைச்சர் ஔரங்கசீப் இதில் பங்கேற்றால், கடந்த 2023-இல் கோவாவில் நடைபெற்ற SCO வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிறகு இந்தியாவிற்கு வரும் முதல் பாகிஸ்தான் அமைச்சர் இவராவார்.

கலாச்சார ராஜதந்திரமும், தொன்மைப் பாரம்பரியமும்

மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இணைந்து இந்த 3 நாள் சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைக்கின்றன.

SCO உறுப்பு நாடுகள் (ரஷ்யா, சீனா, ஈரான், பெலாரஸ் உட்பட), பார்வையாளர் நாடுகள் மற்றும் கூட்டாண்மை நாடுகளிலிருந்து 25-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

கடந்த 2025-இல் டியான்ஜினில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியால்முன்மொழியப்பட்ட இத்திட்டம், தற்போது டெல்லியில் செயல்படுகின்றது.

வரலாற்றுப் பூர்வமான நாகரிகத் தொடர்புகள், கல்வி, பாரம்பரிய அறிவு அமைப்புகள் மற்றும் மக்கள் இடையேயான கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதே இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.
உலகம்•

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு நடத்திய புதிய கணக்கெடுப்பு இதனைத் தெரிவிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் 1,000 முதலாளிகளிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், மனிதவள (HR) நடைமுறைகளின் ஆரம்ப நடவடிக்கைகளான பணியமர்த்தல் (49%), பணியாளர் செயல்திறன் நிர்வாகம் (45%) ஆகியவற்றில் ‘ஏஐ’ பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, சம்பளத்தை முடிவு செய்தல் (26%), பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை […]

“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை
உலகம்•

“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை

ஈரானுடன் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு கன்சாஸ் நகரின் கே.சி.எம்.ஓ வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: “ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஆனால், ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைத் தயாரிக்கவோ அல்லது கைப்பற்றவோ முடியாது என்பதற்கான உறுதியான உத்தரவாதம் அமெரிக்காவுக்கு தேவை. ஈரானிடம் அணுஆயுதம் இல்லாத நிலை உறுதி செய்யப்பட […]

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல்: நெதன்யாஹுவுக்கு பலத்த போட்டி தரும் காடி ஐசென்காட், தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்பு
உலகம்•

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தல்: நெதன்யாஹுவுக்கு பலத்த போட்டி தரும் காடி ஐசென்காட், தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்பு

இஸ்ரேலில் நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கும், முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்காட் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்னதாக வெளியான கருத்துக்கணிப்புகளின்படி, காடி ஐசென்காட்டின் யாஷார் கட்சி, நெதன்யாஹுவின் லிகுட் கட்சியை விட கூடுதல் இடங்களைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் […]

நான்காவது முறையாக பிரேசில் அதிபராகிறார் லுாலா டா சில்வா
உலகம்•

நான்காவது முறையாக பிரேசில் அதிபராகிறார் லுாலா டா சில்வா

பிரேசிலின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக மீண்டும் அதிபராக லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா, 80, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேலின் அதிபருக்கான தேர்தல் கடந்த 4ம் தேதியன்று நடந்தது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் லுாலா டா சில்வா, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவின் மகன் ப்ளாவியா போல்சோனாரோ உட்பட பலர் போட்டியினர். இதில் லுாலா 45.16 சதவீத வாக்குகளையும், ப்ளாவியா 48.21 சதவீத வாக்குகளையும் பெற்றனர். ஆனால், அதிபராக தேர்வாவதற்கான […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →