முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/“பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி ஒருநாள் வருவார்” – குடியரசு துணைத் தலைவர் தகவல்
தமிழகம்

“பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி ஒருநாள் வருவார்” – குடியரசு துணைத் தலைவர் தகவல்

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
“பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி ஒருநாள் வருவார்” – குடியரசு துணைத் தலைவர் தகவல்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

“பிரதமர் மோடி பசும்பொன்னுக்கு ஒரு நாள் வந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார்” என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, இன்று காலை தேவர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வரிசையில் நின்ற பொதுமக்களிடம் கை கொடுத்து வணக்கம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் குப்புராமு, பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் முரளிதரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் குடியரசு துணைத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திர போராட்ட காலத்தில் மட்டுமில்லாமல் அதற்குப் பிறகும் சமுதாயத்திற்காக தன் வாழ்வின் குறிக்கோளாக முழு மூச்சாக செயல்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை தலைவராக ஏற்றுக் கொண்டவர். தேசத்தின் எழுச்சிக்கும், தெய்வீக எழுச்சிக்கும் தமிழக மண்ணில் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.

அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு எந்த துரோகத்தையும் செய்ய விரும்பவில்லை. அவர் மட்டும் அரசியலில் சமரசம் செய்திருந்தால் தமிழகத்தின் முதல்வராக முத்துராமலிங்கத் தேவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மை, தவம், கண்ணியம் மிகுந்த வாழ்க்கை வாழ்ந்தவர். ஆதிதிராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.

அம்மக்களுக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவாயில் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். தன்னுடைய சொத்தில் பெரும் பகுதியை ஆதிதிராவிட மக்களுக்காக கொடுத்துள்ளார். இப்படி மகத்தான தேசிய தலைவரின் பிறப்பும், இறப்பும் ஒரே நாளில் நடத்திருப்பது, மகா சித்த புருஷர் என்பதை நிரூபிக்கிறது.

உண்மையான தேசியமும், தெய்வீகமும் என்றைக்கும் அழியாமல் பாதுகாப்பது நமது கடமையாகும். அவருக்கு நாம் தொடர்ந்து அஞ்சலி செலுத்த வேண்டும். பசும்பொன்னுக்கு ஒரு நாள் பிரதமர் மோடி வருகை தந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார் என தெரிவித்தார்.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்
தமிழகம்•

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், “கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும், பிழையான வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், அந்தப் புத்தகங்களின் வெளியீட்டாளர்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரிகள் போலியாக […]

“பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்
அரசியல்•

“பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்

பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் பேத்தி திருமணம் சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. வைதீக முறைப்படி மந்திரங்கள் ஓத நடைபெற்ற இந்த திருமணம் குறித்து சர்ச்சை உருவானது. தி.க. தலைவர் கி.வீரமணியும் இதுகுறித்து விமர்சித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது பேத்தியின் திருமணம் குறித்து சில விளக்கங்களை திமுக தோழர்களுக்கும், […]

திண்டுக்கலில் பிரபல தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு
தமிழகம்•

திண்டுக்கலில் பிரபல தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மற்றும் தேனியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகம்•

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் சி.பழனி உட்பட 3 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் 2 பேர், 69 துணை ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) டி.ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநராகவும், அந்த பதவியில் இருந்த சி.பழனி, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல, விடுப்பு […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →