முக்கிய செய்திகள்
📅
முகப்பு/அரசியல்/3 தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாம்: திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி பெற முயற்சி
அரசியல்

3 தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாம்: திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி பெற முயற்சி

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
3 தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாம்: திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி பெற முயற்சி

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

மத்​திய அரசிடம் நிதி​யுதவி கோரி தமிழக அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜூனா, ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி ஆகியோர் டெல்​லி​யில் முகாமிட்​டுள்​ளனர். மத்​திய அமைச்​சர்​களை சந்​தித்து நிதி​பெறும் முயற்​சிகளில் ஈடு​பட்​டுள்​ளனர்.

அந்​தவகை​யில் மத்​திய கப்​பல் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சர்​பானந்த சோனாவாலை, பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்ஜூனா நேற்று சந்​தித்து பேசினார். அப்​போது தமிழகத்​தின் முக்​கிய கடல்​சார் கட்​டு​மான மேம்​பாட்​டுத் திட்​டங்களுக்கு நிதி​யுத​விக்​கான கோரிக்கை மனுவை அவர் அளித்​தார். அப்போதுதுறை செயலர் சுன்சோங்​கம் ஜடக் சிரு, தமிழ்​நாடு கடல்​சார் வாரியத்தின் தலை​மைச் செயல் அலுவலர் அன்​பழகன் மற்​றும் துறைசார்ந்த அலு​வலர்​கள் உடனிருந்​தனர்.

அதில் இடம்​பெற்​றுள்ள முக்​கிய அம்​சங்​கள்: ராமேசுவரம்-தலைமன்​னார் (இலங்கை) பன்​னாட்டு பயணிகள் படகு போக்​கு​வரத்​துத் திட்​டத்தை தொடங்க ரூ.118 கோடி வழங்க வேண்​டும்.

கடலூர் பசுமைவள ஆழ்​கடல் துறைமுக மேம்​பாடு திட்​டத்​துக்கு ரூ.4,700 கோடியும் பக்​கிங்​காம் கால்வாய் புனரமைத்தல் மற்றும் ஆழப்​படுத்​துதல் பணிகளுக்கு ரூ.2,700 கோடியும் ஒதுக்க வேண்​டும். கடல் நடைபாதைகள் சென்னை மெரீனா, மகாபலிபுரத்​தில் கடல் நடைபாதைகள் அமைப்​ப​துடன், சென்னை-புதுச்​சேரி பயணிகள் படகு போக்​கு​வரத்து தொடங்​கு​வதற்கு ரூ.900 கோடியும், மேற்கு மற்​றும் கிழக்கு கடல் பகுதியை இணைக்​கும் பாம்​பன் கால்​வாயை 10 மீட்​டருக்கு ஆழப்​படுத்​தும் பணிகளுக்கு ரூ.1,200 கோடியும் வழங்க வேண்டு​மென கேட்​கப்​பட்​டுள்​ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான விரிவான கோரிக்கை ஆவணத்தை வழங்கினார். அப்போது, சென்னைக்குள் நுழையும் முக்கிய சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொண்டு, தேவையான முன்னெடுப்புகளைச் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தமிழகத்தின் பொருளாதார வழித்தடங்களை வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசின் திட்டங்கள் மிகவும் அவசியம். எனவே, தமிழகத்தின் சாலை மேம்பாட்டுக்கான கோரிக்கைகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கி, திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேட்டுக் கொண்டார்.

இது​த​விர மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்​பாக மத்​திய நீர்​வளத்​துறை அமைச்சர் சி.ஆர்.பாட்​டீலை, தமிழக நீர்​வளத்​துறை அமைச்​சர் என்.ஆனந்த் டெல்​லி​யில் இன்று சந்​தித்​துப் பேசவுள்ளதாகவும் கூறப்​படு​கிறது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
சண்டியர்’ தலைப்பை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு
அரசியல்•

சண்டியர்’ தலைப்பை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’ திரைப்படத்தின் தலைப்பை மாற்ற கோரி, வரும் டிச.7-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். நடிகர்களின் ஒவ்வொரு அசைவும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தென் மாவட்டங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு படக்குழுவினர் தலைப்பை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆர்ப்பாட்ட நாளன்று தணிக்கை குழுவிடமும் தலைப்பை மாற்ற கோரி மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்

‘தவெக ஆட்சியில் தமிழகம் 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது’ – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
அரசியல்•

‘தவெக ஆட்சியில் தமிழகம் 6 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது’ – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

 6 மாத கால தவெக ஆட்சி தமிழகத்தை 6 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது, என தருமபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தருமபுரி அதிமுக அலுவலகத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சரும் பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கந்தசாமி வரவேற்றார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோகன் (கிழக்கு), டி.ஆர்.அன்பழகன் (மேற்கு), எம்எல்ஏ-க்கள் மரகதம் வெற்றிவேல், சம்பத்குமார் ஆகியோர் […]

தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி
அரசியல்•

தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவிடம் 41 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் இன்று (நவ.21) பேட்டியளித்த அவர், தவெக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை என்றும், அது தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு என்ன திட்டம் கொண்டுவந்தார்கள் மற்றும் அதனால் மக்கள் என்ன நன்மை பெற்றார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்
அரசியல்•

வி.எஸ்.பாபுவின் உடல் தகனம்: இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்

சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் திரு.வி.க. நகர் மின்மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ.வான வி.எஸ்.பாபு, சுவாச பாதிப்பு காரணமாக கடந்த செப்.9-ம் தேதி அமைந்த கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதைக் கண்டறிந்த மருத்துவ குழுவினர், உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில், 72 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மதியம் […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →