முக்கிய செய்திகள்
📅
முகப்பு/உலகம்/“சிறையில் இருந்து உயிருடன் திரும்புவது கடினம்” – இம்ரான் கான் தெரிவிப்பு
உலகம்

“சிறையில் இருந்து உயிருடன் திரும்புவது கடினம்” – இம்ரான் கான் தெரிவிப்பு

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
“சிறையில் இருந்து உயிருடன் திரும்புவது கடினம்” – இம்ரான் கான் தெரிவிப்பு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

சிறையில் இருந்து உயிருடன் திரும்புவது மிக கடினம் என்று பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் நாட்டில் உச்ச அதிகாரம் கொண்ட நீதிபதிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதை அவரது வழக்கறிஞர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் இம்ரான் கான் கூறியதாவது: “நான் இந்த கடிதத்தை முன்னாள் பிரதமர் என்ற முறையிலோ, அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலோ எழுதவில்லை. பாகிஸ்தானுக்காக கிரிக்கெட், தொண்டு மற்றும் மக்கள் பணி ஆற்றியுள்ளேன். தனி சிறையில் இருந்து இந்த கடிதத்தை எழுதி உள்ளேன். இந்த சிறையின் சுவர்களை கடந்து எனது குரலை வெளிப்படுத்த எனக்கு இது ஒன்றுதான் வழி.

வெளி உலகுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். எனது வலது கண்ணில் பார்வை திறனை 85 சதவீதம் இழந்துள்ளேன். உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் சூழல் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

உயிருடன் இருந்தால் மட்டுமே ‘நான் நிரபராதி’ என்பதை என்னால் நிரூபிக்க முடியும். மனித நேயத்தின் விழுமியங்களின் அடிப்படையில், காலம் கடக்கும் முன் எனக்கு நீதியை பெற்றுத் தருமாறு உங்களிடம் முறையிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் (73), கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். அவரது பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2023 முதல் அவர் ராவல்பிண்டியில் உள்ள ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
இந்தியாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை – பாகிஸ்தான் அமைச்சர்
உலகம்•

இந்தியாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக், இந்தியாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த இதுவரை அழைப்பு வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்கலாசார உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு முறையான அழைப்பும், அதற்கான நடைமுறையும் அவசியம் என்றார். பயங்கரவாதம் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளுக்கும், முறையான பேச்சுவார்த்தை தொடங்கினால் பதிலளிப்பதாகக் கூறினார்.

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் AI டேட்டா சென்டர்கள் அமைத்தால் கடும் வரி.! டிரம்ப் எச்சரிக்கை
உலகம்•

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் AI டேட்டா சென்டர்கள் அமைத்தால் கடும் வரி.! டிரம்ப் எச்சரிக்கை

வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள்Al Data Centre-களை அமைக்க தடை விதிக்கப் போவதாக, ஆண்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிற நாடுகளில் AI Data Centre-களை அமைத்தால் மிகப்பெரிய வரி விதிக்கப்படும் என அமெரிக்க நிறுவனங்களுக்கு, அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர் மற்ற நாடுகளுக்கு Data Centre-கள் சென்றால், அவற்றை சீனா கைப்பற்றி கொள்ளும். எனவே அவற்றை அமெரிக்காவிலேயே வைத்திருக்கப் போகிறோம். இதை மீறும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வரி விதிக்கப்படும். அமெரிக்க […]

சீனாவின் மின் விமான சோதனை வெற்றி
உலகம்•

சீனாவின் மின் விமான சோதனை வெற்றி

சீனாவில் முதல்​முறை​யாக மனிதர்​களால் இயக்கப்பட்ட மின்சார விமான பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் வணிக விமானக் கழகம்(சிஓஎம்​ஏசி), சீனா ஏவுவாகன தொழில்​நுட்​பக் கழகம், ஷாங்​காய் ஜியாடோங் பல்​கலைக்​கழகம் ஆகிய​வற்​றின் கூட்டு முயற்​சி​யில் மின்​சார விமானம் தயாரிக்கப்பட்​டுள்​ளது. சிஇ-25ஏ என்ற இந்த விமானம், உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இது முதல் முறை​யாக கடந்த பிப்​ரவரி 2-ம் தேதி ஆளில்​லாமல் பறக்​கவைக்​கப்​பட்டு சோதனை நடத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், கிழக்கு சீனாவின் ஷான்​டாங் மாகாணத்​தில் சனிக்கிழமை அன்று இந்த விமானம் மனிதர்​கள் மூலம் […]

“ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிப்பு” – காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்
உலகம்•

“ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிப்பு” – காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்

என்விடியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங். இவர் அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாகப் பணியாற்றினார். சமீபத்தில், இவர் மீது எழுந்த புகார்களால் (சீன உளவாளியுடன் தொடர்பு, நிறுவனத்தில் பணியாற்றியவர்களுடன் உறவு) தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார் ஜென்சன் ஹுவாங். இவருக்குப் பதிலாக, என்விடியா நிறுவனத்தின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக கோலெட் கிரெஸ் கடந்த நவம்பர் 12-ம் தேதி நியமிக்கப்பட்டார். இப்போது அந்த […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →