முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/செஞ்சி சிறுமியை பெங்களூருவில் தேடும் சிபிசிஐடி போலீஸார்
தமிழகம்

செஞ்சி சிறுமியை பெங்களூருவில் தேடும் சிபிசிஐடி போலீஸார்

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
செஞ்சி சிறுமியை பெங்களூருவில் தேடும் சிபிசிஐடி போலீஸார்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி நள்ளிரவு மாயமானார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட செல்போன் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் இவ்வழக்கு கடந்த 21-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களும் தொடர்ந்து தீவிர விசாரணையில் உள்ளனர்.

இதற்கிடையே, சிறுமியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் உள்ளூரைச் சேர்ந்த மேலும் இரு இளைஞர்களிடம் போலீஸார் நேற்று மாலை விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பாக சில விவரங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.

அப்போது சிறுமியின் உறவினர்கள் சிலர் பெங்களூருவில் இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்துவதற்காக சிபிஐசிஐடி போலீஸாரின் ஒரு குழுவினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமைப் பொறியாளர் நியமனம் எப்போது? நிதித்துறை ஆதிக்கம்; வாடுகிறது விவசாயம்!
தமிழகம்•

காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைமைப் பொறியாளர் நியமனம் எப்போது? நிதித்துறை ஆதிக்கம்; வாடுகிறது விவசாயம்!

மேகதாது அணை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு, இக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கச் செய்து, காவிரி தொழில்நுட்பப் பிரிவுக்குப் புதிய தலைமைப் பொறியாளரை நியமிக்க அரசாணை வெளியிட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நதிநீர்ச் சிக்கல் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசின் உரிமைகளை நீதிமன்றங்களிலும் ஆணையங்களிலும் நிலைநிறுத்தி வரும் ‘காவிரி மற்றும் […]

சரியும் ஜி.எஸ்.டி. வருவாய்! ஆந்திராவுக்கு செல்லும் முதலீடுகள்: த.வெ.க. அரசின் நிர்வாக தோல்வி காரணமா?
தமிழகம்•

சரியும் ஜி.எஸ்.டி. வருவாய்! ஆந்திராவுக்கு செல்லும் முதலீடுகள்: த.வெ.க. அரசின் நிர்வாக தோல்வி காரணமா?

தென்னிந்தியாவின் முன்னணி பொருளாதார மற்றும் தொழில்துறை மையமாகப் பல தசாப்தங்களாகத் திகழ்ந்து வந்த தமிழ்நாடு, அண்மைக்காலத்தில் பொருளாதார ரீதியாக சந்ததித்து வரும் சவால்களும் மந்தநிலையும் சாமானிய பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு த.வெ.க. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் நிலவும் மெத்தனப்போக்கும், தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தைப் பொருளாதாரக் போட்டிக் களத்தில் பின்தள்ளியிருப்பதாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தென்னிந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாக உற்பத்தியின் முதன்மை […]

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
அரசியல்•

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 4- ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 26- ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

தமிழ்நாடு நாள் – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தமிழகம்•

தமிழ்நாடு நாள் – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →