முக்கிய செய்திகள்
📅
முகப்பு/இந்தியா/ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அக். 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி
இந்தியா

ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அக். 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால் அக். 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலகாவிட்டால் அக்டோபர் 2-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே அறிவித்துள்ளார். சனிக்கிழமைக்குள் (நாளை) ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால், சிஜேபி சார்பில் அக்டோபர் 2 அன்று தேசிய அளவிலான போராட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: “நமது நாட்டில் தேர்தல்கள் முறைகேடாக நடத்தப்படுகின்றன. ஆனால், முறைகேடுகள் நிறைந்த இந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் அந்த தேர்தல்களுக்கு நீங்கள் அங்கீகாரம் அளிக்கிறீர்கள். தேர்தலில் போட்டியிடாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்.

மேலும், அவை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவது போன்ற ஒரு மாயையைத் தக்கவைக்கவும் உதவுகிறீர்கள். ஒருவேளை, தேர்தலில் போட்டியிடாவிட்டால் தங்களது கட்சி அரசியலில் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நீங்கள் (எதிர்க்கட்சிகள்) தொடர்ந்து போட்டியிடலாம். ஆனால், வாக்குகள் திருடப்படும்போது, உங்களுடைய சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் பக்கம் இழுக்கப்படும்போது, உங்கள் கட்சிகள் பிளவுபடுத்தப்படும்போது, நீங்கள் எதைப் பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள்?

இது அரசியல் பிழைப்புக்கான முயற்சி அல்ல. உங்களை பலவீனப்படுத்தவோ, உங்கள் கட்சியைப் பிளவுபடுத்த, உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பில், நீங்கள் உயிர்வாழ மட்டுமே முயற்சிக்கிறீர்கள். இப்படி எவ்வளவு காலத்துக்கு உங்களால் தாக்குப்பிடிக்க முடியும்?

உங்களுக்குத் தேவையான மாநிலங்களில் தேர்தல் முறைகேடு நடக்கும்போது மட்டும் அதைப் பற்றிப் பேசிவிட்டு, மற்ற இடங்களில் நடக்கும்போது மவுனமாக இருக்கிறீர்கள். தேர்தல் முறைகேடு என்பது எந்த மாநிலத்தில் அல்லது எந்தக் கட்சி பாதிக்கப்படுகிறது என்றில்லாமல் ஒரு முக்கியப் பிரச்சினையாக அனைத்துக் கட்சியினரும் நினைக்க வேண்டும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 2-ல் மும்பையில் தொடங்கும் போராட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும். காந்தி ஜெயந்தி தினத்தில், ஜனநாயகத்தைக் காக்க நாம் உறுதியேற்போம்” என்று அவர் தெரிவித்தார்.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்
இந்தியா•

இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி – டெல்லியில் குவிந்த ஏராளமான தொண்டர்கள்

புது டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் பிரம்மாண்ட பேரணி இன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக 14 ஆயிரம் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இண்டியா கூட்டணியினர் இன்று தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இண்டியா கூட்டணியின் பேரணிக்காக ‘சலோ டெல்லி’ (டெல்லி நோக்கிச் […]

கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
இந்தியா•

கரப்பான் பூச்சி நிர்வாகி இந்தியரா? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, அக். 31– கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.ஜே.பி., எனும் கரப்பான் பூச்சி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ், இந்தியர் தானா என்பது குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட கோரி, சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் […]

நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்
இந்தியா•

நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இலவசமாக பராமரிக்க தயார்: பிரதாப் சி ரெட்டி தகவல்

விக்​சித் பாரத் திட்​டத்​தின் ஒரு பகுதி​யாக நாடு முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனைகள், ஆரம்ப சுகாதார மையங்​களை இல​வச​மாக பராமரிக்க தயாராக இருப்பதாக அப்​போலோ குழும தலை​வர் பிரதாப் சி ரெட்டி தெரி​வித்​தார். அப்​போலோ மருத்​துவ குழு​மத்​தின் தலை​வர் பிரதாப் சி ரெட்டி ஆந்​திர மாநிலம், சித்​தூர் மாவட்​டத்​தில் உள்ள அவரது சொந்த ஊரான அரகொண்​டாவில் நிறு​வப்​பட்​டுள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யின் சாதனையை பாராட்டி பேசினார். தனது சொந்த ஊர் மக்​களுக்​காக கடந்த 2000-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த […]

உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து – பயணித்த 6 பேரும் உயிரிழப்பு
இந்தியா•

உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து – பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் இறந்துவிட்டதாக உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீக் ஜெயின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி வாயிலாக இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர் பத்ரிநாத் கோயிலில் இருந்து டேராடூனில் உள்ள சகஸ்தரதாரா ஹெலிபேடுக்குச் சென்று கொண்டிருந்தபோது, […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →