முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/மதுரை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது இன்ஸ்டாகிராம் இளைஞர்: கைதாகாமல் தப்பியதால் போலீஸ் ஏமாற்றம்
தமிழகம்

மதுரை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது இன்ஸ்டாகிராம் இளைஞர்: கைதாகாமல் தப்பியதால் போலீஸ் ஏமாற்றம்

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
மதுரை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது இன்ஸ்டாகிராம் இளைஞர்: கைதாகாமல் தப்பியதால் போலீஸ் ஏமாற்றம்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

மதுரை நகைக்​கடை கொள்​ளை​யில் ஈடு​பட்​டது, அதே பகுதி​யைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இளைஞர் என்​பது தெரிய​வந்​துள்​ளது. அவரைப் பிடிக்​கப் போன போலீ​ஸார், நபர் சிக்​காததால் ஏமாற்​றம் அடைந்​தனர்.

மதுரை பைபாஸ் சாலை நேரு நகரில் புதிதாக திறக்​கப்​பட்ட தனிஷ்க் நகைக் கடை​யில் நேற்று முன்​தினம் அதி​காலை ரூ.50 கோடி மதிப்​புள்ள நகைகள் கொள்ளை போனது. காவல் ஆணை​யர் ராஜேந்​திரன் உத்​தர​வின்​பேரில் 5 தனிப்​படை​யினர் தீவிர தேடுதல் வேட்​டை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். சிசி​டிவி கேமரா காட்​சிகளை வைத்து தீவிர விசா​ரணை நடக்​கிறது.

அதி​காலை 3.34 மணிக்கு சம்​பந்​தப்​பட்ட நகைக்​கடை அரு​கில் இருந்து ஹெல்​மெட், முகமூடி அணிந்து ஸ்​கூட்​டரில் நேரு நகருக்​குள் கொள்​ளை​யன் சென்ற வீடியோ காட்​சிகள் கிடைத்​தன. இதன் அடிப்​படை​யில் சந்​தேகத்​தின் பேரில் அடை​யாளம் காணப்​பட்ட இளைஞர் குறித்து விசா​ரணை நடந்​தது.

இது குறித்து தனிப்​படை​யினர் தரப்​பில் கூறிய​தாவது: சந்​தேகப்​பட்ட இளைஞர் குறித்து விசா​ரித்​த​போது அவர் பலமுறை அதே நகைக்​கடைக்கு நகை வாங்​கு​வதுபோல் வந்து சென்​றுள்​ளார். பல டிசைன் நகைகளை தேர்வு செய்து, வாங்​காமலேயே அடிக்​கடி திரும்​பியுள்​ளது அங்​குள்ள கேம​ராவில் தெரிந்​தது.

பல வண்ண உடைகளில் வந்த இளைஞர் ஒரே தொப்​பியை மட்​டும் தினசரி அணிந்து வந்​துள்​ளார். இந்த தொப்​பிதான் போலீ​ஸாருக்கு சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது. இதை உறுதிப்​படு்த்​தி​யதில் 21 வயது இளைஞரின் பெயர் நிஷாந்த் எனவும், நகைக்​கடைக்கு அருகேயுள்ள தெரு​வில் வசிப்​ப​தும் இன்ஸ்ட்​ராகிராமில் தீவிர​மாக இருந்​துள்​ளதும் தெரிந்​தது.

இதையடுத்து, துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன் தலை​மையில் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார். அந்த இளைஞரின் வீட்​டுக்​குள் புகுந்​தனர். இதை அறிந்த நிஷாந்த் அங்​கிருந்து தப்​பினார். அவர் சென்​னைக்கு சென்​றதாக குடும்​பத்​தினர் தெரி​வித்​துள்​ளனர். அவரைத் தேடி தனிப்​படை சென்னை விரைந்​துள்​ளது. வீடு, அவர் வசிக்​கும் தெரு உள்​ளிட்ட சந்​தேகிக்​கும் இடங்​களில் நகையை பதுக்கி வைத்​துள்​ளாரா என போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

ஆடம்​பர வாழ்க்​கைக்கு ஆசைப்​பட்டு கொள்​ளை​யில் ஈடு​பட்​டது தெரிந்​துள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர். கொள்​ளை​யனை அடை​யாளம் கண்​டும், உடனே கைது செய்து நகைகளை மீட்க முடி​யாததால் போலீஸ் ஏமாற்​றம் அடைந்​தனர்.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
OBC அந்தஸ்து நிரந்தரம் அல்ல.. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான BC, MBC இடஒதுக்கீடு செல்லுமா? ஜி.ஆர்.சுவாமிநாதன் பெஞ்ச் கேள்வி!
தமிழகம்•

OBC அந்தஸ்து நிரந்தரம் அல்ல.. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான BC, MBC இடஒதுக்கீடு செல்லுமா? ஜி.ஆர்.சுவாமிநாதன் பெஞ்ச் கேள்வி!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) அந்தஸ்து நிரந்தரமானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படும் BC, MBC இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜி.கோடீஸ்வரன். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு […]

“மேகேதாட்டு குறித்து மோடி மேடையில் டி.கே.சிவகுமார் பேசியதை ஏற்க முடியாது” – மாணிக்கம் தாகூர்
தமிழகம்•

“மேகேதாட்டு குறித்து மோடி மேடையில் டி.கே.சிவகுமார் பேசியதை ஏற்க முடியாது” – மாணிக்கம் தாகூர்

மேகேதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், ‘மேகேதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்றும், மத்திய அரசு இதற்கு […]

வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.16-ல் புயலாக மாற வாய்ப்பு!
தமிழகம்•

வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.16-ல் புயலாக மாற வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று நவம்பர் 14 காலை 05:30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 மாலை மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். இப்புயல் உருவானால் அதற்கு ‘அக்வான்’ என பெயரிடப்படும்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2,423 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கை
தமிழகம்•

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2,423 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கை

ஊழல் தடுப்பு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் வழக்குகளில் தினசரி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து வழக்குகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க, கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2,423 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →