முக்கிய செய்திகள்
📅
முகப்பு/விளையாட்டு/முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை
விளையாட்டு

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை

✍️ admin••⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையே நடை​பெற்ற 5 டி 20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரை இந்​திய அணி 3-2 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

டி 20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் மோதுகின்​றன. இந்​தத் தொடரின் முதல் ஆட்​டம் இன்று காலை 7.30 மணிக்கு ஆக்லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த தொடரை இரு அணிகளுமே 2027-ம் ஆண்டு நடை​பெற உள்ள ஒருநாள் கிரிக்​கெட் உல​கக் கோப்​பைத் தொடருக்​காக தயார் செய்து​கொள்​வதற்கு பயன்​படுத்​திக் கொள்​ளக்​கூடும்.

டி20 போட்​டிகளில் பேட்​டிங்​குக்கு சாதக​மாக இருந்த ஈடன் பார்க் ஆடுகளம், ஒருநாள் போட்​டி​யில் மாறு​பட்ட தன்​மையுடன் இருக்கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த மைதானத்​தில் பந்துகள் அதிக வேகத்​துடனும், நல்ல பவுன்​ஸுடனும் எழும்​பும். ஏனெனில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்​துக்கு அடுத்​த​படியாக அதிக பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்​களில் ஒன்​றாக ஈடன் பார்க் கருதப்​படு​கிறது.

இந்த மைதானத்​தில் அதி​கபட்ச ஒருநாள் ஸ்கோராக 2007-ம் ஆண்டு பதிவான 340 ரன்​களே நீடிக்​கிறது. கடைசி​யாக இங்கு நடை​பெற்ற 2 ஒருநாள் போட்​டிகளில், முதலில் பேட் செய்த அணிகள் முறையே 150 மற்​றும் 76 ரன்​களுக்கு ஆட்டமிழந்துள்ளன. இத​னால் ஆடுகளத்​தில் பேட்​டிங், பந்​து​வீச்சு என இரண்​டுக்​கும் சமமான வாய்ப்பு கிடைக்​கலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அடுத்த ஆண்டு நடை​பெறவுள்ள ஒருநாள் கிரிக்​கெட் உல​கக் கோப்​பைத் தொடருக்கு முன்​பாக இந்​திய அணி​யின் வீரர்​களின் ஆட்​டத்​திறனை மதிப்​பிட இந்​தத் தொடர் உதவும். குறிப்​பாக, ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஆட்​டம் கவனத்தை ஈர்க்​கக்​கூடும். வேகப்​பந்து வீச்​சுக்கு சாதக​மான ஆடுகளங்​களில் இவர்​களின் செயல்​பாடு முக்​கியத்​து​வம் பெறக்​கூடும். இவர்களுடன் கேப்​டன் ஷுப்​மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்​சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோ​ரும் பேட்​டிங்​கில் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்கின்றனர்.

பேட்​டிங்​கில் இந்​திய அணி வலு​வாக இருக்​கும் நிலை​யில் பந்து வீச்​சில் அனுபவம் குறைந்த வீரர்​களே இடம் பெற்​றுள்​ளனர். இதனால் இந்​திய அணிக்கு ஒருநாள் போட்​டித் தொடர் சவாலாக அமையக்​கூடும்.டெஸ்ட் தொடரை கருத்​தில் கொண்ட முன்​னணி வேகப்​பந்து வீச்​சாளரான ஜஸ்பிரீத் பும்ரா ஒருநாள் போட்​டித் தொடரில் விளை​யாட​வில்லை. அதேவேளை​யில் ஹர்​திக் பாண்டியா, பிரசித் கிருஷ்ணா, ஹர்​ஷித் ராணா ஆகியோர் காயத்​தி​லிருந்து மீளவில்லை.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
“வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயசுலயே கேப்டன்சி கொடுத்ததெல்லாம்..”.. சச்சின் டெண்டுல்கர் முக்கிய அட்வைஸ்
விளையாட்டு•

“வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயசுலயே கேப்டன்சி கொடுத்ததெல்லாம்..”.. சச்சின் டெண்டுல்கர் முக்கிய அட்வைஸ்

இந்திய கிரிக்கெட்டின் 15 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்திய சீனியர் அணியில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்று இருக்கிறார். 2026 துலீப் கோப்பை தொடரில் கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக தனது 15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இளம் வயதிலேயே கேப்டன்சி போன்ற தலைமைப் பொறுப்புகளை […]

ஆசிய பாரா விளையாட்டு.. உலக சாதனையுடன் தங்கம் வென்ற ஹேனி
முக்கிய செய்திகள்•

ஆசிய பாரா விளையாட்டு.. உலக சாதனையுடன் தங்கம் வென்ற ஹேனி

ஜப்பானின் நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர் ஹேனி ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் F37/38 பிரிவில் 60.49 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, 1,116 ரேசா புள்ளிகளைப் பெற்றார். ஈரான் வீரர் ஹார்மோஸ் வெள்ளிப் பதக்கமும், சீன வீரர் யூ செங்ஜி வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-ஐக் கடந்தது

போல் வால்ட்டில் தேசத்துக்கு முதல் பதக்கம்: வரலாறு படைத்த பரணிகா- ஆசிய விளையாட்டு
விளையாட்டு•

போல் வால்ட்டில் தேசத்துக்கு முதல் பதக்கம்: வரலாறு படைத்த பரணிகா- ஆசிய விளையாட்டு

ஜப்பானில் நடைபெறும் நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் போல் வால்ட்டில் வெண்கல பதக்கம் வென்று தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பரணிகா இளங்கோவன் அசத்தியுள்ளார். இதன் மூலம் போல் வால்ட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நடப்பு ஆசிய விளையாட்டின் 7-வது நாளான இன்று (செப்.25) பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தடகள விளையாட்டில் போல் வால்ட் விளையாட்டில் மகளிருக்கான இறுதிச் சுற்றில் இந்தியா சார்பில் […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →