முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்கிறது
தமிழகம்

வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்கிறது

✍️ admin••⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
வங்கக்கடலில் உருவானது ‘அர்னாப்’ புயல் ஆந்திரா அருகே நாளை கரையை கடக்கிறது

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

‘வங்கக்கடலில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, ‘அர்னாப்’ புயலாக உருவானது. இது நாளை மாலை, ஆந்திரா – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை, 8:30 மணிக்கு முந்தைய, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, திருப்பூர் மாவட்டம் காரத்தோலுவு, கோவை மாவட்டம் ஒத்தகல்மண்டபம் பகுதியில், தலா, 16 செ.மீ., மழை பெய்துள்ளது. கடலுார் மாவட்டம், கொத்தவாச்சேரியில், 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை, 5:30 மணிக்கு, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு, ‘அர்னாப்’ என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் நேற்று மதியம் 2:30 மணி நிலவரப்படி, மணிக்கு, 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்தது.
புயலானது ஒடிசா மாநிலம் கோபால்பூரில் இருந்து, கிழக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கே, 610 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுவடைந்தது.
எச்சரிக்கை
இன்று மிக தீவிர புயலாக, அதே பகுதியில் வலுவடையும். அதன்பின், வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரை பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே மிக தீவிர புயலாக, நாளை மாலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு, 115 முதல், 125 கி.மீ., வேகத்திலும், சில நேரங்களில், 140 கி.மீ., வேகத்திலும், சூறை காற்று வீசும். இதன் காரணமாக, கடலோர ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கேரளம் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தென்கடலோர தமிழக பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. மேலும், லட்சத்தீவு பகுதிகளில் இருந்து, தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தென்கடலோர தமிழக பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் வரை, தெற்கு கேரளம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இந்த வானிலை நிகழ்வுகளால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இடி, மின்னல் பலத்த காற்றுடன், இன்றும், நாளையும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில், ‘அர்னாப்’ புயல் சின்னம் உருவாகி உள்ளதால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில், ‘அர்னாப்’ புயல் உருவாகி உள்ள நிலையில், சென்னை, கடலுார், நாகை, எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில், மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களில், இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
விராலிமலை இடைத்தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் முதல்வர் விஜய் – புதுக்கோட்டை பயணத்தின் பின்னணி
அரசியல்•

விராலிமலை இடைத்தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் முதல்வர் விஜய் – புதுக்கோட்டை பயணத்தின் பின்னணி

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதன் பின் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்லும் அவர், கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வர உள்ளார். மேலும் அவர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விராலிமலை தொகுதியில் ரோட்ஷோ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதன் பின் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்லும் […]

“பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி ஒருநாள் வருவார்” – குடியரசு துணைத் தலைவர் தகவல்
தமிழகம்•

“பசும்பொன்னுக்கு பிரதமர் மோடி ஒருநாள் வருவார்” – குடியரசு துணைத் தலைவர் தகவல்

“பிரதமர் மோடி பசும்பொன்னுக்கு ஒரு நாள் வந்து தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்துவார்” என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, இன்று காலை தேவர் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டார். மேலும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த […]

ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்​புடைய 25 இடங்களில் திடீர் சோதனை
அரசியல்•

ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்​புடைய 25 இடங்களில் திடீர் சோதனை

திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்​பாக, தமிழகம் முழு​வதும் அவருக்​கும் அவருடன் தொடர்​புடைய​வர்​களுக்​கும் சொந்​த​மான 25 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். இதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாகத் தகவல் வெளியாகி உள்​ளது. கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில், நக​ராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் சாலை உள்​ளிட்ட கட்​டு​மானப் பணிகளுக்கு ஒப்​பந்​தம் வழங்​கியதில் முறைகேடுகள் நடை​பெற்​றுள்​ளது. அரசுப் பணி​யிடங்​களை நிரப்ப […]

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
அரசியல்•

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் புதிதாக 8 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் சென்றுள்ள அமைச்சர்கள் அருண்ராஜ், டி.கே.பிரபு ஆகிய இருவர் தவிர மற்ற […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →