கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வெற்றி மடிக்கணினித் திட்டத்தை செயல்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கான நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் 2026-2027-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ (ITI), மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கல்விப் பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு (UG) மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) மாணாக்கர்கள் பயனடைவார்கள்.
தொடர்ந்து, பொறியியல் மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வித் தேவைகளை கருத்திற்கொண்டு, அவர்களுக்கு Intel Core i5 அல்லது அதற்கு இணையான உயர்தரத் தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.
இன்றைய அதிவேக டிஜிட்டல் யுகத்தில், அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் உலகளாவிய போட்டித் திறன்களில் சிறந்து விளங்கவும், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த “வெற்றி மடிக்கணினித் திட்டம்” ஒரு மாபெரும் மைல்கல்லாக அமையும் என்பது திண்ணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.









