முக்கிய செய்திகள்
📅
முகப்பு/உலகம்/அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் AI டேட்டா சென்டர்கள் அமைத்தால் கடும் வரி.! டிரம்ப் எச்சரிக்கை
உலகம்

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் AI டேட்டா சென்டர்கள் அமைத்தால் கடும் வரி.! டிரம்ப் எச்சரிக்கை

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் AI டேட்டா சென்டர்கள் அமைத்தால் கடும் வரி.! டிரம்ப் எச்சரிக்கை

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள்Al Data Centre-களை அமைக்க தடை விதிக்கப் போவதாக, ஆண்டின் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிற நாடுகளில் AI Data Centre-களை அமைத்தால் மிகப்பெரிய வரி விதிக்கப்படும் என அமெரிக்க நிறுவனங்களுக்கு, அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர் மற்ற நாடுகளுக்கு Data Centre-கள் சென்றால், அவற்றை சீனா கைப்பற்றி கொள்ளும்.

எனவே அவற்றை அமெரிக்காவிலேயே வைத்திருக்கப் போகிறோம். இதை மீறும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வரி விதிக்கப்படும். அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் தரவு மையங்களைக் கட்டுவதை அனுமதிக்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், வெளிநாடுகளில் தரவு மையங்களை அமைத்தால் சீனா அவற்றைக் கைப்பற்றவோ அல்லது பயன்படுத்தவோ வாய்ப்புள்ளதாக கவலையையும் வெளிப்படுத்தினார்.

முன்பு செமிகண்டக்டர் உற்பத்தியை வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதித்தது அமெரிக்காவிற்குப் பேரிழப்பாக அமைந்ததைப் போல, AI உள்கட்டமைப்பையும் வெளிநாடுகளுக்குத் தாரைவார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
இந்தியாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை – பாகிஸ்தான் அமைச்சர்
உலகம்•

இந்தியாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக், இந்தியாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த இதுவரை அழைப்பு வரவில்லை எனத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்கலாசார உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு முறையான அழைப்பும், அதற்கான நடைமுறையும் அவசியம் என்றார். பயங்கரவாதம் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளுக்கும், முறையான பேச்சுவார்த்தை தொடங்கினால் பதிலளிப்பதாகக் கூறினார்.

சீனாவின் மின் விமான சோதனை வெற்றி
உலகம்•

சீனாவின் மின் விமான சோதனை வெற்றி

சீனாவில் முதல்​முறை​யாக மனிதர்​களால் இயக்கப்பட்ட மின்சார விமான பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் வணிக விமானக் கழகம்(சிஓஎம்​ஏசி), சீனா ஏவுவாகன தொழில்​நுட்​பக் கழகம், ஷாங்​காய் ஜியாடோங் பல்​கலைக்​கழகம் ஆகிய​வற்​றின் கூட்டு முயற்​சி​யில் மின்​சார விமானம் தயாரிக்கப்பட்​டுள்​ளது. சிஇ-25ஏ என்ற இந்த விமானம், உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இது முதல் முறை​யாக கடந்த பிப்​ரவரி 2-ம் தேதி ஆளில்​லாமல் பறக்​கவைக்​கப்​பட்டு சோதனை நடத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், கிழக்கு சீனாவின் ஷான்​டாங் மாகாணத்​தில் சனிக்கிழமை அன்று இந்த விமானம் மனிதர்​கள் மூலம் […]

“சிறையில் இருந்து உயிருடன் திரும்புவது கடினம்” – இம்ரான் கான் தெரிவிப்பு
உலகம்•

“சிறையில் இருந்து உயிருடன் திரும்புவது கடினம்” – இம்ரான் கான் தெரிவிப்பு

சிறையில் இருந்து உயிருடன் திரும்புவது மிக கடினம் என்று பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தான் நாட்டில் உச்ச அதிகாரம் கொண்ட நீதிபதிகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதை அவரது வழக்கறிஞர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இம்ரான் கான் கூறியதாவது: “நான் இந்த கடிதத்தை முன்னாள் பிரதமர் என்ற முறையிலோ, அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலோ எழுதவில்லை. பாகிஸ்தானுக்காக கிரிக்கெட், தொண்டு மற்றும் மக்கள் பணி […]

“ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிப்பு” – காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்
உலகம்•

“ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிப்பு” – காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்

என்விடியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங். இவர் அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாகப் பணியாற்றினார். சமீபத்தில், இவர் மீது எழுந்த புகார்களால் (சீன உளவாளியுடன் தொடர்பு, நிறுவனத்தில் பணியாற்றியவர்களுடன் உறவு) தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார் ஜென்சன் ஹுவாங். இவருக்குப் பதிலாக, என்விடியா நிறுவனத்தின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக கோலெட் கிரெஸ் கடந்த நவம்பர் 12-ம் தேதி நியமிக்கப்பட்டார். இப்போது அந்த […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →