முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களும் சடலங்களாக மீட்பு – கடைசியாக இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின
தமிழகம்

ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களும் சடலங்களாக மீட்பு – கடைசியாக இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின

✍️ admin••⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களும் சடலங்களாக மீட்பு – கடைசியாக இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று மாயமான 9 மீனவர்களில், 7 பேரின் உடல்கள் ஏற்கெனவே கரை ஒதுங்கிய நிலையில், மேலும் இருவரின் உடல்களும், ஆந்திர மாநிலம் கொத்தப்பட்டினம் அருகே கரை ஒதுங்கின. இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி, செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புயல் எச்சரிக்கை காரணமாகப் பாதுகாப்பு கருதி நிஜாம்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படகை அவர்கள் நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, மீண்டும் அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் விசைப்படகின் எஞ்சின் திடீரென பழுதடைந்துள்ளது. இதுகுறித்து, அருகில் இருந்த மற்றொரு விசைப்படகிற்கு கடந்த 3-ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அந்த 9 மீனவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் போனது.

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று மாயமான 9 மீனவர்களில், 7 பேரின் உடல்கள் ஏற்கெனவே கரை ஒதுங்கிய நிலையில், மேலும் இருவரின் உடல்களும், ஆந்திர மாநிலம் கொத்தப்பட்டினம் அருகே கரை ஒதுங்கின. இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து, மீண்டும் அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் விசைப்படகின் எஞ்சின் திடீரென பழுதடைந்துள்ளது. இதுகுறித்து, அருகில் இருந்த மற்றொரு விசைப்படகிற்கு கடந்த 3-ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அந்த 9 மீனவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் போனது.

இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலமாகவும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இதற்கிடையே, ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே 7 மீனவர்களின் உடல்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கின. அவர்கள் தமிழக மீனவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.

எஞ்சி இருந்த மீனவர்களான ராஜேஷ் மற்றும் நாராயணன் ஆகியோரின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவர்களைத் தேடும் பணியை கடலோரக் காவல் படையினர் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், ஆந்திர மாநிலம், கொத்தப்பட்டினம் அருகே உள்ள லட்சுமிபுரம் கடற்கரையோரம் மேலும் இரண்டு மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின.

அந்த உடல்களை மீட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவை மாயமான மீனவர்களான ராஜேஷ், நாராயணன் ஆகியோரின் உடல்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அந்த உடல்கள், ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களின் உடல்களும் சடலங்களாக மீட்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றம்
கட்டுரை•

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றம்

பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பொது நூலக இயக்குநராக இருந்த ஜெயந்தி ஐஏஎஸ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் செலவில் பெரியார் அறிவுலக கட்டும் பணி கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போதைய முதலமைச்சர் விஜய், கடந்த மாதம் பெரியார் நூலகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன், பெரியார் […]

வெற்றி மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் உத்தரவு
தமிழகம்•

வெற்றி மடிக்கணினி திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் உத்தரவு

கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வெற்றி மடிக்கணினித் திட்டத்தை செயல்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இன்றைய டிஜிட்டல் உலகில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது இன்றியமையாத கல்வி உபகரணமாக விளங்குகிறது. மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், இணையவழிக் கல்வி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கும் மடிக்கணினிகள் பெரிதும் உதவும். இதனை கருத்திற்கொண்டு, 2026-2027 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வெற்றி மடிக்கணினித் […]

தீபாவளி பட்டாசு தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் – அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ குழு தயார்
தமிழகம்•

தீபாவளி பட்டாசு தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் – அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ குழு தயார்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 படுக்கையுடன் 24 மணி நேரமும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளதாக குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுத்துறை தலைவர் சங்கரபாரதி தெரிவித்துள்ளார். தீவாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடித்து ஏதேனும் தீக்காயம் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே […]

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்
தமிழகம்•

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரிக்க திமுக வலியுறுத்தல்

கோவை பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில், “கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும், பிழையான வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், அந்தப் புத்தகங்களின் வெளியீட்டாளர்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரிகள் போலியாக […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →