முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு – மதுரை நகைக் கடை கொள்ளை விசாரணையில் போலீஸார் அசத்தல்
தமிழகம்

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு – மதுரை நகைக் கடை கொள்ளை விசாரணையில் போலீஸார் அசத்தல்

✍️ admin••⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு – மதுரை நகைக் கடை கொள்ளை விசாரணையில் போலீஸார் அசத்தல்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை சுரேஷ், அவரது தோழி மீனாட்சி ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையும் போலீஸார் மீட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நிஷாந்த்தைத் தேடி வருகின்றனர்.

மதுரை பைபாஸ் நேரு நகர் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ம் தேதி அதிகாலை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. கடையின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கிலோ கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டன.

கொள்ளையர்களைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில், துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் கொள்ளை நடந்த அதிகாலை 3.34 மணியளவில் ஹெல்மெட், முகமூடி அணிந்த 21 வயது இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் நேரு நகர் பகுதிக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே, கொள்ளைக்கு முன்பு நகை வாங்குவதுபோல் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், நகைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர் விசாரணையில், அந்த இளைஞர் விகேபி நகரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், அவரது தந்தையான ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் உள்ளிட்ட உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு நிஷாந்த் அணிந்திருந்த ஆடைகளை அவரது தந்தை சுரேஷுடன் சேர்ந்து மதுரை அருகே மாடக்குளம் வயல்வெளிப் பகுதியில் எரித்தது தெரியவந்தது. இதை நேரில் பார்த்ததாக அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில் சுரேஷ் (55) கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நிஷாந்த்தின் தோழியும் மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலமுமான திருப்பாலை அய்யர்பங்களாவைச் சேர்ந்த மீனாட்சி (26) என்பவருக்கும் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீஸார் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் முதற்கட்டமாக 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை 3 பகுதிகளாகப் பிரித்ததாகவும், அதில் 2 பகுதிகளை தங்களிடம் கொடுத்துவிட்டு எஞ்சிய நகைகளுடன் நிஷாந்த் தலைமறைவானதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாடக்குளம் மலையடிவாரத்தில் நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து மீனாட்சியை போலீஸார் அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது புதருக்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்த 10 கிலோ நகைகள் அடங்கிய பையை மீட்டனர். இதுவரை 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

நகைக்கடை கொள்ளையில் 2 பேர் சிக்கியது குறித்து போலீஸார் கூறும்போது, “நகைக்கடை கொள்ளைச் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான நிஷாந்த், தனது தோழி மீனாட்சியுடன் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதன் அடிப்படையில் மீனாட்சியிடம் விசாரணை நடத்தியபோது, கொள்ளையில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.நிஷாந்த்தின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், அவர் கடைசியாக திருப்பூரில் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் செல்போனை வாங்கி, அதன் மூலம் மீனாட்சியுடன் பேசியுள்ளார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இந்தக் கொள்ளையில் நகைக்கடை ஊழியர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். தலைமறைவாக உள்ள நிஷாந்த்தைக் கைது செய்தால் மட்டுமே கொள்ளையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, மீதமுள்ள நகைகள் எங்கு உள்ளன என்பது குறித்த முழு விவரங்களும் தெரியவரும்” என்றனர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
OBC அந்தஸ்து நிரந்தரம் அல்ல.. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான BC, MBC இடஒதுக்கீடு செல்லுமா? ஜி.ஆர்.சுவாமிநாதன் பெஞ்ச் கேள்வி!
தமிழகம்•

OBC அந்தஸ்து நிரந்தரம் அல்ல.. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான BC, MBC இடஒதுக்கீடு செல்லுமா? ஜி.ஆர்.சுவாமிநாதன் பெஞ்ச் கேள்வி!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) அந்தஸ்து நிரந்தரமானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படும் BC, MBC இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜி.கோடீஸ்வரன். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு […]

“மேகேதாட்டு குறித்து மோடி மேடையில் டி.கே.சிவகுமார் பேசியதை ஏற்க முடியாது” – மாணிக்கம் தாகூர்
தமிழகம்•

“மேகேதாட்டு குறித்து மோடி மேடையில் டி.கே.சிவகுமார் பேசியதை ஏற்க முடியாது” – மாணிக்கம் தாகூர்

மேகேதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், மத்திய அரசு இதற்கு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், ‘மேகேதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்றும், மத்திய அரசு இதற்கு […]

மதுரை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது இன்ஸ்டாகிராம் இளைஞர்: கைதாகாமல் தப்பியதால் போலீஸ் ஏமாற்றம்
தமிழகம்•

மதுரை நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டது இன்ஸ்டாகிராம் இளைஞர்: கைதாகாமல் தப்பியதால் போலீஸ் ஏமாற்றம்

மதுரை நகைக்​கடை கொள்​ளை​யில் ஈடு​பட்​டது, அதே பகுதி​யைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இளைஞர் என்​பது தெரிய​வந்​துள்​ளது. அவரைப் பிடிக்​கப் போன போலீ​ஸார், நபர் சிக்​காததால் ஏமாற்​றம் அடைந்​தனர். மதுரை பைபாஸ் சாலை நேரு நகரில் புதிதாக திறக்​கப்​பட்ட தனிஷ்க் நகைக் கடை​யில் நேற்று முன்​தினம் அதி​காலை ரூ.50 கோடி மதிப்​புள்ள நகைகள் கொள்ளை போனது. காவல் ஆணை​யர் ராஜேந்​திரன் உத்​தர​வின்​பேரில் 5 தனிப்​படை​யினர் தீவிர தேடுதல் வேட்​டை​யில் ஈடு​பட்​டுள்​ளனர். சிசி​டிவி கேமரா காட்​சிகளை வைத்து தீவிர விசா​ரணை நடக்​கிறது. […]

வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.16-ல் புயலாக மாற வாய்ப்பு!
தமிழகம்•

வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.16-ல் புயலாக மாற வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று நவம்பர் 14 காலை 05:30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 மாலை மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். இப்புயல் உருவானால் அதற்கு ‘அக்வான்’ என பெயரிடப்படும்.

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →