முக்கிய செய்திகள்
📅
முகப்பு/அரசியல்/”தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்”; மாணிக்கம் தாகூர் விளக்கம்!
அரசியல்

”தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்”; மாணிக்கம் தாகூர் விளக்கம்!

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
”தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்”; மாணிக்கம் தாகூர் விளக்கம்!

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு  ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இது சம்பந்தமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ வின் இந்த அபத்தமான செயலுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் மாணிக்கம் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது, அவர் பேசுகையில், ”பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் புகாரில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம். வாட்ஸ்அப்பில் பரவும் தகவல்களை வைத்து அவரைக் குற்றவாளியாகச் சித்தரிப்பது நியாயமில்லை.  ஒருவேளை தவறு நடந்திருந்தால் நடாடிக்கை எடுக்கட்டும்.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, தனது செல்போன் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யுமாறு விளக்கம் அளித்துள்ளார்” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?
அரசியல்•

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?

துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி எம்எல்ஏவுமான ரவிசங்கர் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கோரிக்கை மனு அளிக்க வந்தவரை தாக்கிய புகாரில் சிக்கியுள்ள ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சைகளில் சிக்கும் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளது.

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
அரசியல்•

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்

இடைத்​தேர்​தல் நடை​பெற உள்ள விராலிமலை தொகுதி​யில், முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் சார்​பில் விசிலுடன் கூடிய பரிசுப் பொருட்​கள் வீடுவீடாக விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்​றன. விராலிமலை தொகுதி உரு​வான 2011-ல் இருந்து நடை​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவைத் தேர்​தல்​களி​லும் அதிமுக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்று வந்​தார். கடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் அவர் வெற்றி பெற்ற நிலை​யில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமியுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால், அக்​கட்​சி​யில் இருந்து வில​கியதுடன், எம்​எல்ஏ பத​வியையும் அவர் ராஜினாமா […]

“பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்
அரசியல்•

“பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்

பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் பேத்தி திருமணம் சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. வைதீக முறைப்படி மந்திரங்கள் ஓத நடைபெற்ற இந்த திருமணம் குறித்து சர்ச்சை உருவானது. தி.க. தலைவர் கி.வீரமணியும் இதுகுறித்து விமர்சித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது பேத்தியின் திருமணம் குறித்து சில விளக்கங்களை திமுக தோழர்களுக்கும், […]

“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை
அரசியல்•

“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை

“டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 56% சரிந்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல. இதனால் டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது” என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதே […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →