தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று நவம்பர் 14 காலை 05:30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 மாலை மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். இப்புயல் உருவானால் அதற்கு ‘அக்வான்’ என பெயரிடப்படும்.
வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.16-ல் புயலாக மாற வாய்ப்பு!

இந்த செய்தியைப் பகிர்க:
செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)
செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்
நேயர்கள் கருத்து (Reader Reactions)
இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:









