முக்கிய செய்திகள்
📅
முகப்பு/முக்கிய செய்திகள்/சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரிப்பு

சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரிப்பு

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரிப்பு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

சென்னை: வடகிழக்கு பருவமழையால், சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரித்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் 5 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு விநாடிக்கு 210 கன அடி, பூண்டி ஏரிக்கு 490 கன அடி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 50 கன அடி, சோழவரம் ஏரிக்கு 10 கன அடி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கன நீர் வந்துகொண்டிருக்கிறது.

ஆகவே இன்று காலை நிலவரப்படி, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,415 மில்லியன் கன அடி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 565 மில்லியன் கன அடி, 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 253 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

அதேபோல் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 144 மில்லியன் கன அடி மற்றும் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,488 மில்லியன் கன அடி என நீர் இருப்பு உள்ளது.

இதனால் 11,757 மில்லியன் கன அடி மொத்தக் கொள்ளளவு கொண்ட சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில், கடந்த 15-ம் தேதி காலை நிலவரப்படி 3,959 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. இது இன்று காலை நிலவரப்படி 4,865 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. அதாவது 10 நாட்களில் மொத்த நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரித்துள்ளது என, நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
அரசியல்•

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 4- ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 26- ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

திமுக மாஜியை நேரில் சந்தித்த தவெக விஜயபாஸ்கர்; தவெகவில் இணையும் திமுகவினர்!
அரசியல்•

திமுக மாஜியை நேரில் சந்தித்த தவெக விஜயபாஸ்கர்; தவெகவில் இணையும் திமுகவினர்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அன்னவாசல் ஒன்றிய திமுக செயலாளராக இருந்த சந்திரன், விராலிமலை ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் ஆகியோரின் ஒன்றிய செயலாளர்களை பதவிகளை கடந்த வாரம் திமுக தலைமை பறித்துவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதனால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அன்னவாசல் திமுக பேரூர் செயலாளர் முகமது ரிசா, சந்திரன் மகன் இளையசூரியன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஜி விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் தவெக பொதுச் செயலாளர் […]

தமிழ்நாடு நாள் – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தமிழகம்•

தமிழ்நாடு நாள் – முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய […]

ஒரு தமிழர் நிச்சயம் பிரதமராவார்: துணை ஜனாதிபதி
தமிழகம்•

ஒரு தமிழர் நிச்சயம் பிரதமராவார்: துணை ஜனாதிபதி

ஒரு தமிழர் நிச்சயம் பிரதமராவார்: துணை ஜனாதிபதி துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை மதுரை, அக். 31– திண்டுக்கல் காந்திகிராம பல்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, நேற்று மாலை துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு, கோவில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணியிடம் ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். எல்லோருக்கும் வாய்ப்பு அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு, பிரசாதம் வழங்கப்பட்டது. […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →