முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் வீட்டில் சோதனை
தமிழகம்

அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் வீட்டில் சோதனை

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் வீட்டில் சோதனை

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம் தொடர்பாக, அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று (நவ.16) சோதனை நடத்தி வருகின்றனர். ‘சிந்தை’ இணையதளத்தில் வெளியான கட்டுரையின் எதிரொலியாக, நூலகங்களில் வைக்கப்பட்டிருந்த 70,000-க்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து, நூல் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பதிப்பக உரிமையாளர் வீட்டில்சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
வி.எஸ்.பாபு உடல்நிலை: கொளத்தூர் மக்கள் கவலை
அரசியல்•

வி.எஸ்.பாபு உடல்நிலை: கொளத்தூர் மக்கள் கவலை

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு அடுத்த 6 மணி நேரம் மிகவும் முக்கியமான காலம் என மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தனியார் இதழில் செய்தி வெளியாகியுள்ளது. அவரது கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டு சளி வெளியேற்றப்படுவதோடு, எக்மோ (ECMO) கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை மருத்துவ அறிக்கை வெளியாகாததால் கொளத்தூர் மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

திருச்செந்தூரில் விண்ணைப் பிளந்த அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹாரம் கோலாகலம்
தமிழகம்•

திருச்செந்தூரில் விண்ணைப் பிளந்த அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹாரம் கோலாகலம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி […]

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு – மதுரை நகைக் கடை கொள்ளை விசாரணையில் போலீஸார் அசத்தல்
தமிழகம்•

‘இன்ஸ்டா’ ஜோடி கைவரிசை: 15 கிலோ நகைகள் மீட்பு – மதுரை நகைக் கடை கொள்ளை விசாரணையில் போலீஸார் அசத்தல்

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த்தின் தந்தை சுரேஷ், அவரது தோழி மீனாட்சி ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மலையடிவாரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையும் போலீஸார் மீட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நிஷாந்த்தைத் தேடி வருகின்றனர். மதுரை பைபாஸ் நேரு நகர் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12-ம் தேதி அதிகாலை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. கடையின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கிலோ கணக்கில் […]

OBC அந்தஸ்து நிரந்தரம் அல்ல.. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான BC, MBC இடஒதுக்கீடு செல்லுமா? ஜி.ஆர்.சுவாமிநாதன் பெஞ்ச் கேள்வி!
தமிழகம்•

OBC அந்தஸ்து நிரந்தரம் அல்ல.. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கான BC, MBC இடஒதுக்கீடு செல்லுமா? ஜி.ஆர்.சுவாமிநாதன் பெஞ்ச் கேள்வி!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) அந்தஸ்து நிரந்தரமானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படும் BC, MBC இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் ஜி.கோடீஸ்வரன். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →