முக்கிய செய்திகள்
📅
முகப்பு/இந்தியா/தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: காங்கிரஸ் அறிவிப்பு
இந்தியா

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: காங்கிரஸ் அறிவிப்பு

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: காங்கிரஸ் அறிவிப்பு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த டெல்லி சலோ போராட்டத்தைக் காங்கிரஸ் கட்சி ஒத்திவைத்துள்ளது. அதற்குப் பதிலாக, அரசியலமைப்பு தினமான நவம்பர் 26-ஆம் தேதி அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ‘அரசியலமைப்பு பாதுகாப்புப் பேரணி’ நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்குகளைக் காப்போம், தேசத்தைக் காப்போம்’இயக்கத்தின் நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ‘டெல்லி சலோ’ போராட்டம் வேறொரு தேதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் டெல்லி உட்பட அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பிரம்மாண்டமான பேரணிகளை நடத்துமாறு அனைத்து மாநிலக் காங்கிரஸ் கமிட்டிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 1-ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற பேரணியில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் நோக்கில் ‘வாக்குப் பாதுகாவலர்’ என்ற புதிய முன்னெடுப்பைக் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் ஒரு பயிற்சி பெற்ற வாக்குப் பாதுகாவலரை மண்டலத் தலைவர்கள் நவம்பர் 21-ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். இவர்கள் நவம்பர் 22 முதல் 30-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை நேரில் சந்தித்து விவரங்களைச் சரிபார்த்து, அதற்கென உருவாக்கப்பட்டுள்ள www.iamvoterakshak.in என்ற இணையதளத்தில் தினசரி பதிவேற்றம் செய்ய உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 29 முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை கிராம மற்றும் மண்டல அளவில் மக்கள் சபைகள் நடத்தப்பட உள்ளன. இதில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர்களும் இதில் நேரில் கலந்துகொண்டு, வாக்குரிமைப் பாதுகாப்பை வலியுறுத்த உள்ளனர்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது
இந்தியா•

திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிலையங்கள்: ரேமாண்ட்ஸ் நிறுவனம் அமைக்கிறது

திருப்பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து செல்​கின்​றனர். இவர்​களின் வசதிக்​காக திரு​மலை​யில் ‘தர்ம ரதம்’ என்​னும் பெயரில் 50 பேட்​டரி பேருந்​துகள் இலவச​மாக இயக்கப்படுகின்றன. திரு​மலை​யில் ஆட்​டோக்​கள், ரேபிடோ உள்​ளிட்ட வசதி​கள் இல்லாததால், பக்​தர்​களுக்கு இலவச பேருந்து வசதியை திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் ஏற்​படுத்தி கொடுத்​துள்​ளது. இந்தப் பேருந்​துகள் எப்​போது வரும்? எங்கு செல்​லும்? என்​பது குறித்து சமீபத்​தில் ‘வெங்​க​டாத்​ரி’ செல்​போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்​நிலை​யில், இலவச பேருந்​துகள் நின்று […]

ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? – அகிலேஷ் கேள்வி
இந்தியா•

ராமர் கோயில் நன்கொடை திருட்டு: யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்? – அகிலேஷ் கேள்வி

“அயோத்தி – ராமர் கோயில் நன்கொடை திருட்டு குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மவுனம் காப்பது ஏன்?” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 1990-ல் அயோத்தியில் கர சேவகர்கள் மீது உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் டிசம்பரில் அயோத்திக்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அயோத்திக்கு வருவதற்கு முன் கர சேவகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடந்த […]

‘எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாடம் தேவையில்லை’ – சோனியா காந்தி ஆவேசம்
இந்தியா•

‘எங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பாடம் தேவையில்லை’ – சோனியா காந்தி ஆவேசம்

அரசியல் வெற்றிக்காக எங்களுக்கு ஆர்எஸ்எஸ் பாடம் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘Belonging: A Journey of Love’ வெளியீட்டிற்கு முன்னதாக, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர், ‘கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் கட்டமைப்பு, ஜனநாயகம், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனங்கள் கடுமையாக சீரழிக்கப்பட்டுள்ளன’ என குற்றம்சாட்டினார். மேலும், […]

இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்
இந்தியா•

இனி எந்த வயதிலும் சட்ட படிப்பு படிக்கலாம்: இந்திய பார் கவுன்சில்

இந்திய பார் கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, இனி எந்த வயதை சேர்ந்தவர்களும் வயது வரம்பின்றி சட்ட படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிற்கு 20 வயதும், 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு 30 வயதும் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து 2016-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →