முக்கிய செய்திகள்
📅
முகப்பு/கட்டுரை/கல்வெட்டுகளில் அம்பத்தூர்: சோழர் காலம் முதல் இன்றைய தொழில் புரட்சி வரை..!
கட்டுரை

கல்வெட்டுகளில் அம்பத்தூர்: சோழர் காலம் முதல் இன்றைய தொழில் புரட்சி வரை..!

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
கல்வெட்டுகளில் அம்பத்தூர்: சோழர் காலம் முதல் இன்றைய தொழில் புரட்சி வரை..!

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

அன்றைய காலகட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகத்திலும் பொருளாதார முடிவுகளிலும் அம்பத்தூர் மக்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பதை இது காட்டுகிறது.
சென்னையின் முக்கியத் தொழில் நகரமாகத் திகழும் அம்பத்தூர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செழிப்பான நிர்வாக மையமாக விளங்கியது. தொண்டை மண்டலத்தின் புழற்கோட்டத்திற்குள், ‘அம்பத்தூர் நாடு’ என்ற பெயரில் பல ஊர்களை உள்ளடக்கிய பெருநிலப் பகுதியாக இது இருந்துள்ளது. ‘ஐம்பது ஊர்களின்’ தலைமை இடமாக இருந்ததால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள பழமையான கல்வெட்டுகள் அம்பத்தூரின் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றைப் பறைசாற்றுகின்றன.

முதலாம் உத்தம சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்திலேயே ‘அம்பத்தூர் ஊர்ச்சபை’ மிகவும் வலிமையோடு செயல்பட்டுள்ளது. கி.பி. 1018-19 காலகட்டத்தைச் சேர்ந்த திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோயில் கல்வெட்டில், அம்பத்தூர் ஊர்ச்சபையினர் 4,000 குழி நிலத்தை விற்றுக் கோயில் நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்த செய்தி பதிவாகியுள்ளது. அன்றைய காலகட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகத்திலும் பொருளாதார முடிவுகளிலும் அம்பத்தூர் மக்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பதை இது காட்டுகிறது.

சோழர்களைத் தொடர்ந்து பாண்டியர் மற்றும் விஜயநகரப் பேரரசுக் காலத்திலும் அம்பத்தூர் நாட்டின் செல்வாக்குத் தொடர்ந்தது. கி.பி. 1289-ஆம் ஆண்டு சுந்தர பாண்டியர் கல்வெட்டில் முகப்பேர் பகுதி அம்பத்தூர் நாட்டின் கீழ் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கி.பி. 1520-ஆம் ஆண்டு விஜயநகரக் காலக் கல்வெட்டின் மூலம், அம்பத்தூரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரம்மாண்ட வாரச்சந்தை நடந்ததும், அதன் வரி வருவாய் கோயில் திருப்பணிகளுக்குப் பயன்பட்டதும் தெரியவருகிறது.

ஏரிகள், பசுமையான விவசாய நிலங்கள், கோயில்கள் என அமைதியாக இருந்த அம்பத்தூர், 20-ஆம் நூற்றாண்டில் நவீன மாற்றத்தைக் கண்டது. 1964-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் அம்பத்தூர் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வேளாண் கிராமம், ஆசியாவின் முக்கியத் தொழில் மையங்களில் ஒன்றாகப் பரிணமித்தது. தொடர்ந்து 1971 ஜனவரியில் பாடி, கொரட்டூர், முகப்பேர் உள்ளிட்ட பத்து வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டு அம்பத்தூர் நகராட்சியாக உருவெடுத்தது.

இன்றைக்குப் பரபரப்பான தொழிற்சாலைகளும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் நிறைந்த நவீன நகரமாக அம்பத்தூர் காட்சியளிக்கிறது. ஆனால், இதன் ஒவ்வொரு வீதிக்கும் அடியில் ஆயிரம் ஆண்டுகால உள்ளாட்சி நிர்வாகமும், ஊர்ச்சபைகளும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய வணிகச் சந்தை வரலாறும் புதைந்து கிடக்கின்றன.

 

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல் !!! !!! !!!
கட்டுரை•

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல் !!! !!! !!!

1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். 2. சுமார் 36,000 + பெரிய கம்பெனிகள் உள்ளது 3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது. 4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே 5. உலகில் உள்ள மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் 6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த […]

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றம்
கட்டுரை•

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு விவகாரம்: பொது நூலகத்துறை இயக்குநர் மாற்றம்

பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பொது நூலக இயக்குநராக இருந்த ஜெயந்தி ஐஏஎஸ் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் செலவில் பெரியார் அறிவுலக கட்டும் பணி கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போதைய முதலமைச்சர் விஜய், கடந்த மாதம் பெரியார் நூலகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன், பெரியார் […]

‘மாமல்லனால்’ சூழலியல் பேரழிவு: தமிழர் வரலாற்றைப் புதைத்து கட்டப்படும் நீர்த் தேக்கம் எதற்கு?
கட்டுரை•

‘மாமல்லனால்’ சூழலியல் பேரழிவு: தமிழர் வரலாற்றைப் புதைத்து கட்டப்படும் நீர்த் தேக்கம் எதற்கு?

சங்க காலத்துடன் நேரடியாகத் தொடர்புடைய கோவளம் உப்பளங்கள், 2500 ஆண்டுகால தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டவை. அந்த உப்பளப் பகுதி தமிழர்களின் வரலாற்றோடும் கடல்சார் பொருளாதாரத்தின் முக்கிய தூணாகவும் விளங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் நோக்கில், உப்பளங்களை அழித்து அரசு அமைக்க இருக்கும் நீர்த் தேக்கத் தொட்டியால், வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதி முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‘செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட கோவளம் உப்பளப் […]

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.
உலகம்•

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பாதியளவு முதலாளிகள் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு நடத்திய புதிய கணக்கெடுப்பு இதனைத் தெரிவிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் 1,000 முதலாளிகளிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், மனிதவள (HR) நடைமுறைகளின் ஆரம்ப நடவடிக்கைகளான பணியமர்த்தல் (49%), பணியாளர் செயல்திறன் நிர்வாகம் (45%) ஆகியவற்றில் ‘ஏஐ’ பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, சம்பளத்தை முடிவு செய்தல் (26%), பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதை […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →