முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/தமிழக ரேஷன் கடைகளில் தரம் உயர்ந்த அரிசி விநியோகம்
தமிழகம்

தமிழக ரேஷன் கடைகளில் தரம் உயர்ந்த அரிசி விநியோகம்

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
தமிழக ரேஷன் கடைகளில் தரம் உயர்ந்த அரிசி விநியோகம்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரத்திலான அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது புழுங்கல் அரிசியில் 16%, பச்சரிசியில் 25% வரை உடைந்த அரிசி இருக்க அனுமதி உள்ள நிலையில், இனி புழுங்கல் அரிசியில் 5%, பச்சரிசியில் 10% மட்டுமே உடைந்த அரிசி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட அரிசி விநியோகம் ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கி, அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவிப்பு
தமிழகம்•

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக அறிவிப்பு

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை (நவம்பர் 14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், வரும் நவம்பர் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் உருவானால் அதற்கு ‘அக்வான்’ என பெயரிப்படும்.

மதுரை நகைக்கடை கொள்ளை.. விடிய விடிய விசாரணை
தமிழகம்•

மதுரை நகைக்கடை கொள்ளை.. விடிய விடிய விசாரணை

மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நேற்று 15 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விடிய விடிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நகைக்கடை ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களைப் பிடிக்கவும், அவர்களைக் கண்டறியவும் தனிப்படை போலீசார் அண்டை மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி
தமிழகம்•

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 மே 22, 23-ம் தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் மற்றும் படுகாயம் அடைந்த 40 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக ஏற்கெனவே […]

“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” – தவெக அரசு மீது பழனிசாமி சாடல்
அரசியல்•

“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” – தவெக அரசு மீது பழனிசாமி சாடல்

“திறமை இல்லாத ஓர் அரசாங்கம்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆறு மாத கால ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம்தான் ஏராளம். இவர்களால் வெற்றி என்று பெயரை மட்டும்தான் மாற்ற முடியும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகவும் மோசமான ஆட்சி நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகமாக நடைபெறுகிற […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →