முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி
தமிழகம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 மே 22, 23-ம் தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் மற்றும் படுகாயம் அடைந்த 40 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக ஏற்கெனவே வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் தரக்கோரி முதல்வரிடம் முறையிட்டனர். அதை பரிசீலனை செய்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய தலா ரூ.50 லட்சத்தில் ஏற்கெனவே வழங்கிய ரூ.25 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி வழங்கப்படவுள்ளது.

படுகாயம் அடைந்த 40 நபர்களுக்கு வழங்க வேண்டிய தலா ரூ.10 லட்சத்தில் ஏற்கெனவே வழங்கிய ரூ.5 லட்சம் போக மீதமுள்ள தொகையான தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.2 கோடியும் என மொத்தம் ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” – தவெக அரசு மீது பழனிசாமி சாடல்
அரசியல்•

“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” – தவெக அரசு மீது பழனிசாமி சாடல்

“திறமை இல்லாத ஓர் அரசாங்கம்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆறு மாத கால ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம்தான் ஏராளம். இவர்களால் வெற்றி என்று பெயரை மட்டும்தான் மாற்ற முடியும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகவும் மோசமான ஆட்சி நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகமாக நடைபெறுகிற […]

”தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்”; மாணிக்கம் தாகூர் விளக்கம்!
அரசியல்•

”தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்”; மாணிக்கம் தாகூர் விளக்கம்!

கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு  ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இது சம்பந்தமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ வின் இந்த அபத்தமான செயலுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் […]

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: மீன்பிடி படகுகள் நாளை இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு
தமிழகம்•

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: மீன்பிடி படகுகள் நாளை இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் நாளை (நவ.12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வங்கக்கடலில் (நவ.13) வெள்ளிக்கிழமை அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD), சென்னை மண்டல அலுவலகத்தால், தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்பார்க்கப்படும் வானிலை […]

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?
அரசியல்•

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?

துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி எம்எல்ஏவுமான ரவிசங்கர் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கோரிக்கை மனு அளிக்க வந்தவரை தாக்கிய புகாரில் சிக்கியுள்ள ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சைகளில் சிக்கும் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளது.

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →