முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டை: 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது
தமிழகம்

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டை: 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது

✍️ admin••⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டை: 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

தீபாவளி கொலைகளைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

தீபாவளியன்று தமிழகம் முழுவதும் 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக நவ.9, 10 ஆகிய தேதிகளில் தமிழக காவல் துறை, மாநிலம் தழுவிய சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையின் போது 15,000-க்கும் மேற்பட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டன. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல், போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளைத் தகர்த்தல் மற்றும் பொது அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த 48 மணி நேர நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதுடன், குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பலர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை:

மாநிலம் முழுவதும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், காவல் துறையினர் வழக்கமான குற்றவாளிகளைக் குறிவைத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து 8,626 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து சோதனை செய்தனர். இதன் விளைவாக, 443 குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 796 தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள் மீது நன்னடத்தை உறுதி நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை:

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கொடுங்குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக சமரசமற்ற வகையில், தமிழ்நாடு காவல் துறை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தீவிர சோதனைகளை மேற்கொண்டது. இந்தச் சிறப்பு நடவடிக்கையின் போது, மாநிலம் முழுவதும் 1,624 போதைப்பொருள் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதன் விளைவாக, சட்டவிரோதமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 77 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் மீது கண்காணிப்பு:

பழிவாங்கும் நோக்கிலான குற்றங்களைத் தடுத்து, பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில், கொலை மற்றும் காயம் ஏற்படுத்துதல் தொடர்பான வழக்குகளில் ஏற்கெனவே தொடர்புடைய, சிறையிலிருந்து சமீபத்தில் விடுதலையானவர்கள் உட்பட 2,924 குற்றவாளிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் 163 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 167 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கை:

தீவிர வாகனச் சோதனைகளின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறிய ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 2,865 மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்குகளும் , 1,243 அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டிய வழக்குகளும், 998 நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறிய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

ட்ரோன் மூலம் கண்காணிப்பு:

குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வணிக வளாகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறையினர் ட்ரோன்களைப் பயன்படுத்தி திறந்தவெளிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில், பொது இடங்களில் மது அருந்தியதற்காக 1,859 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 195 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களிலும் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன.

உளவுத்துறை கண்காணிப்பு:

குற்றசம்பவங்கள் தொடர்பான அச்சுறுத்தல்கள் முறியடிப்பதற்கும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கும், சிறப்புப் பிரிவுகள் மற்றும் உள்ளூர் காவல் நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. ஆழமாக வேரூன்றிய குற்றவியல் குழுக்களுடன் தொடர்புடைய 1,057 குற்றவாளிகள், அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கு முன்பாகவே காவல் துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

பிடியாணைகளை நிறைவேற்றுதல்:

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நீதிமன்ற நடவடிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில், தலைமறைவாக இருந்த அல்லது நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்காத குற்றவாளிகளுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட 73 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள், இந்த இரண்டு நாள் சிறப்பு நடவடிக்கையின்போது நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு காவல் துறை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணுதல், சமூக அமைதியை உறுதிப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகிறது.

பொது அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் எந்தவொரு சமூக விரோத சக்திகளுக்கும் எதிராகவும், இதுபோன்ற தீவிரமான, முன்னெச்சரிக்கை அடிப்படையிலான திடீர் சோதனை மற்றும் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க மனு
தமிழகம்•

முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க மனு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளித்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சரணடைந்த முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்ததாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தரப்பில் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் […]

தமிழ்நாடு அரசு வங்கிக்கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி கொள்ளை – சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை
தமிழகம்•

தமிழ்நாடு அரசு வங்கிக்கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி கொள்ளை – சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ. 22 கோடியே 10 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கிராமப்புறங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்காக அரசு ஒதுக்கும் […]

டாஸ்மாக்கில் 2 நாளில் ரூ.441 கோடி வசூல்
தமிழகம்•

டாஸ்மாக்கில் 2 நாளில் ரூ.441 கோடி வசூல்

தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 2 ஆயிரத்துக்கும் அதிமான கடைகளில் மது அருந்தும் பார்கள் உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளை பொறுத்தவரை தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறும். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், மற்ற பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பெரும்பாலானோருக்கு சனி, ஞாயிறு என 2 […]

ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களும் சடலங்களாக மீட்பு – கடைசியாக இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின
தமிழகம்•

ஆந்திர கடல் பகுதியில் மாயமான 9 மீனவர்களும் சடலங்களாக மீட்பு – கடைசியாக இருவரின் உடல்களும் கரை ஒதுங்கின

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று மாயமான 9 மீனவர்களில், 7 பேரின் உடல்கள் ஏற்கெனவே கரை ஒதுங்கிய நிலையில், மேலும் இருவரின் உடல்களும், ஆந்திர மாநிலம் கொத்தப்பட்டினம் அருகே கரை ஒதுங்கின. இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 29-ஆம் தேதி, செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →