முக்கிய செய்திகள்
📅
முகப்பு/சினிமா/“ஒரு வாரத்தில் ‘சண்டியர்’ தலைப்பை மாற்றாவிட்டால்…” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை
சினிமா

“ஒரு வாரத்தில் ‘சண்டியர்’ தலைப்பை மாற்றாவிட்டால்…” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
“ஒரு வாரத்தில் ‘சண்டியர்’ தலைப்பை மாற்றாவிட்டால்…” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

“நடிகர் கமல்ஹாசன் ஒரு வாரத்துக்குள் சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சண்டியர் என்ற பெயரில் கமல்ஹாசன் எடுக்கும் படத்துக்கு எந்தக் காரணம் கொண்டும் அத்தலைப்பை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புதன்கிழமை (நவ.11) மனு கொடுக்கப்பட்டது. 23 ஆண்டுக்கு முன் அப்போதே சண்டியர் என பெயர் வைத்ததை எதிர்த்து நாங்கள் முதல்வரிடம் மனு கொடுத்தோம். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கமல்ஹாசனை அழைத்து அறிவுரை வழங்கியதன் அடிப்படையில், அப்போது வைக்க திட்டமிட்டிருந்த பெயரை கைவிட்டார்.

2004-ல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதே சண்டியர் என்ற பெயரை வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்திருக்கக் கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்தபோது, கமிட்டியை கூட்டி இது குறித்து ஆலோசிப்போம் என கூறினர். இன்றைய இளைஞர்கள் மிகப் பெரிய அளவில் சினிமா தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். அதிலும், சினிமாவின் தலைப்புகளால் மிகப் பெரிய அளவில் தாக்கத்துக்கு ஆளாகின்றனர்.

2004-ம் ஆண்டு ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தாரோ அதே நடவடிக்கையை இப்போதைய முதல்வரும் எடுக்க வேண்டும். 2025-ம் ஆண்டு கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்துக்கும் எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். அதேதான் இப்போதும் ‘சண்டியர்’ படத்துக்கு கூறுகிறோம்.

நாங்கள் எந்த மொழி, சாதி, மதத்துக்கும் நாங்கள் ஆதரவாக பேசவில்லை. படத்தில் காட்டக்கூடிய காட்சிகளை இளைஞர்கள் ரீல்ஸ் செய்து மோதி கொள்கிறார்கள். சண்டியர் பெயரால் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு மீறப்படும்.

3 மணி நேரம் பொழுதுபோக்கு இடமே திரைப்படம் தவிர, ஆயுத கலாச்சாரத்தையும் அரிவாள் கலாச்சாரத்தையும் உருவாக்க கூடாது. தமிழ் திரைப்படத்தில் அரிவாள் கலாச்சாரம், ஆபாச கலாச்சாரம், சாதிய கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். வன்மத்தை பிரதிபலிக்கும் களமாக திரைப்படங்கள் அமைந்துவிடக் கூடாது. மத்திய தணிக்கை வாரியம், படத்தின் தலைப்பு இறுதியானது அல்ல என கடந்த அக்.26-ம் தேதி கூறியுள்ளனர்.

கமல்ஹாசனுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் தனது படத்தின் பெயரின் தலைப்பை மாற்றிதான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் இல்லையெனில் தமிழகத்தில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் நாங்கள் தொடர் முற்றுகைப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
கிரீஸில் விமரிசையாக நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணம்
சினிமா•

கிரீஸில் விமரிசையாக நடந்த அனிருத் – காவ்யா மாறன் திருமணம்

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தருக்​கும், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் கிரிக்​கெட் அணி​யின் இணை உரிமையாளரான காவ்யா மாறனுக்​கும் கிரீஸ் நாட்​டில் நேற்று திரு​மணம் நடைபெற்றது. தமிழ் திரை​யுல​கின் முன்​னணி இசையமைப்​பாளர்​களுள் ஒருவரான அனிருத் ரவிச்​சந்​தர் மற்​றும் சன் டிவி நெட்​வொர்க்​கின் நிர்​வாக இயக்​குநர்​களுள் ஒரு​வரும் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் ஐபிஎல் கிரிக்​கெட் அணி​யின் இணை உரிமையாள​ரு​மான காவ்யா மாறன் திரு​மணத்தை கிரீஸ் நாட்​டில் நடத்த முடிவு செய்திருந்தனர். இதில் பங்​கேற்​க நெருங்​கிய உறவினர​கள் மற்​றும் முக்​கியப் பிர​முகர்​களுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்​தது. அதன்​படி […]

‘ராமாயணா’ காட்சிகளை இணையத்தில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை
சினிமா•

‘ராமாயணா’ காட்சிகளை இணையத்தில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படத்தை திரையரங்குகளில் சட்டவிரோதமாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்வோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதைத் தொடர்ந்து, திரையரங்குகளுக்குள் வைத்து எடுக்கப்பட்ட ஏராளமான காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாகப் […]

இந்தியாவில் மட்டும் ‘ஜெயிலர் 2’ வசூல் ரூ.500 கோடியை கடந்து சாதனை
சினிமா•

இந்தியாவில் மட்டும் ‘ஜெயிலர் 2’ வசூல் ரூ.500 கோடியை கடந்து சாதனை

ரஜினியின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர் 2’ படம் இந்திய அளவில் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படத்தின் 15-வது நாளில் ரூ.5.99 கோடி வசூலாகி இருக்கும் […]

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல்: ₹710 கோடியைத் தாண்டி ‘2.0’ சாதனையை முறியடித்த ரஜினிகாந்த்
சினிமா•

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல்: ₹710 கோடியைத் தாண்டி ‘2.0’ சாதனையை முறியடித்த ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளவில் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியான 11 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.710.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் 2, 2-வது வார இறுதியில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய எழுச்சியைச் சந்தித்துள்ளது. 11-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தியாவில் ரூ.25.70 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →