முக்கிய செய்திகள்
📅
முகப்பு/அரசியல்/“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” – தவெக அரசு மீது பழனிசாமி சாடல்
அரசியல்

“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” – தவெக அரசு மீது பழனிசாமி சாடல்

✍️ admin••⏱️ 2 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” – தவெக அரசு மீது பழனிசாமி சாடல்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

“திறமை இல்லாத ஓர் அரசாங்கம்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆறு மாத கால ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம்தான் ஏராளம். இவர்களால் வெற்றி என்று பெயரை மட்டும்தான் மாற்ற முடியும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகவும் மோசமான ஆட்சி நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகமாக நடைபெறுகிற காரணத்தால்தான் இப்படிப்பட்ட செயல்களும் நடைபெறுகிறது.

தவெக அரசை அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். அறிக்கை விடுகின்றனர். செய்தியாளர்களை சந்திக்கும்போது கண்டிக்கின்றனர். ஆனால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

திறமை இல்லாத ஓர் அரசாங்கம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆறு மாத கால ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம்தான் ஏராளம். விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றைதான் மக்கள் சந்திக்கிறார்கள்.

அரசு பொறுப்பேற்று 6 மாத காலம் ஆகியும், ஒரு பெரிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்கள் என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்?” என்றார்.

பல திட்டங்களுக்கு ‘வெற்றி’ என பெயரிடப்படுவது குறித்த கேள்விக்கு, “இவர்களால் வெற்றி என பெயரை மட்டும்தான் மாற்ற முடியும். அதைத் தவிர தமிழகத்துக்கு அவர்களால் வேறு எதையும் கொடுக்க முடியாது” என்று கூறினார்.

மேலும், “அதிமுக சார்பில் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என கேட்கிறீர்கள். எதை பொது வெளியில் பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது. எனவே, சில கருத்துகளை இப்போது தெரிவிக்க முடியாது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து செங்கோட்டையன் பேசியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அத்தகைய சூழல் வரும்போது அனைத்து ஊடக நண்பர்களையும் அழைத்து தெளிவாகத் தெரிவிப்போம்” என்றார் பழனிசாமி.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
”தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்”; மாணிக்கம் தாகூர் விளக்கம்!
அரசியல்•

”தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்”; மாணிக்கம் தாகூர் விளக்கம்!

கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு  ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இது சம்பந்தமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ வின் இந்த அபத்தமான செயலுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் […]

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?
அரசியல்•

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?

துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி எம்எல்ஏவுமான ரவிசங்கர் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கோரிக்கை மனு அளிக்க வந்தவரை தாக்கிய புகாரில் சிக்கியுள்ள ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சைகளில் சிக்கும் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளது.

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
அரசியல்•

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்

இடைத்​தேர்​தல் நடை​பெற உள்ள விராலிமலை தொகுதி​யில், முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் சார்​பில் விசிலுடன் கூடிய பரிசுப் பொருட்​கள் வீடுவீடாக விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்​றன. விராலிமலை தொகுதி உரு​வான 2011-ல் இருந்து நடை​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவைத் தேர்​தல்​களி​லும் அதிமுக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்று வந்​தார். கடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் அவர் வெற்றி பெற்ற நிலை​யில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமியுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால், அக்​கட்​சி​யில் இருந்து வில​கியதுடன், எம்​எல்ஏ பத​வியையும் அவர் ராஜினாமா […]

“பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்
அரசியல்•

“பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்

பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் பேத்தி திருமணம் சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. வைதீக முறைப்படி மந்திரங்கள் ஓத நடைபெற்ற இந்த திருமணம் குறித்து சர்ச்சை உருவானது. தி.க. தலைவர் கி.வீரமணியும் இதுகுறித்து விமர்சித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது பேத்தியின் திருமணம் குறித்து சில விளக்கங்களை திமுக தோழர்களுக்கும், […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →